News April 29, 2025
UPI சரியா வேலை செய்யணும்.. அமைச்சர் கண்டிப்பு

கடந்த ஜனவரி, மார்ச் மாதங்களில் 282 நிமிடங்கள் UPI வேலை செய்யாத நிலையில், இனி இதுபோன்ற இடையூறு இருக்கக் கூடாது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டிப்பு காட்டியுள்ளார். டெல்லியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிதித்துறை செயலாளர், RBI, NPCI அதிகாரிகள் பங்கேற்றனர். அதில் பேசிய அமைச்சர், அடுத்த 3 ஆண்டுகளில் நாளொன்றுக்கு 100 கோடி UPI பரிவர்த்தனைகள் நடக்க நடவடிக்கை எடுக்கவும் ஆணையிட்டுள்ளார்.
Similar News
News April 29, 2025
மோடியும், கெஜ்ரிவாலும் மன்னிப்பு கேட்க வேண்டும்

2010 காமன்வெல்த் போட்டி முறைகேடு வழக்கை முடித்துவைக்க வேண்டும் என்ற ED-ன் அறிக்கையை டெல்லி கோர்ட் ஏற்றுக்கொண்டது. 13 ஆண்டுகள் நடந்த விசாரணையில் காமன்வெல்த் போட்டியின் ஏற்பாட்டு குழுத் தலைவர் சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோருக்கு எதிராக ஆதாரங்கள் கண்டறியப்படவில்லை என ED கூறியது. இந்த ஊழலை வைத்து காங்கிரசை விமர்சித்த மோடியும், கெஜ்ரிவாலும் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்.
News April 29, 2025
‘பாகிஸ்தான் வாழ்க’ என்றவர் அடித்துக் கொலை

‘பாகிஸ்தான் வாழ்க’ என்று சொன்னதற்காக ஒருவர் அடித்தே கொல்லப்பட்டுள்ள சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவிவரும் சூழலில், மங்களூருவில் கடந்த 27-ம் தேதி நடந்த உள்ளூர் கிரிக்கெட் மேட்சின் போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஒருவர் முழக்கமிட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சிலர் அவரை அடித்தே கொலை செய்துள்ளனர். இதுதொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது.
News April 29, 2025
ஷேக் முஜிபுர் PHOTO கொண்ட ரூபாய் நோட்டுகள் வாபஸ்

ஒரே இரவில் பழைய ₹500, ₹1000 செல்லாது என்று PM மோடி அறிவித்தது போலவே வங்கதேச நாட்டிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேச தந்தையாக கொண்டாடப்படும் முன்னாள் அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் படம் கொண்ட ரூபாய் நோட்டுகள் நிறுத்தப்படுவதாக அந்நாட்டின் மத்திய வங்கி அறிவித்ததால், பண நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களின் தேவைக்காக, விரைவில் புதிய ரூபாய் நோட்டுகளை சந்தையில் விட அந்நாட்டு திட்டமிட்டுள்ளது.