News April 29, 2025

ஆரணி அருகே பட்டா கத்தியுடன் ரீல்ஸ்

image

ஆரணி அடுத்த நெசல் சாலையில் நேமிக்குமார்(20) என்ற இளைஞர் பட்டா கத்தியுடன் செல்போனில் ‘ரீல்ஸ்’ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்து அச்சமடைந்த அப்பகுதி மக்கள் ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர். ரீலிஸ் மோகத்தில் வெத்து சீன் போட்ட நேமிக்குமார் தற்போது வேலூர் மத்திய சிறையில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார். 

Similar News

News April 29, 2025

BREAKING: குடிநீர் தொட்டியில் மனித மலம்!

image

தி.மலை மாவட்டம் பாணம்பட்டு கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மலத்தை பூசிய நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை தண்ணீர் பிடிக்க வந்த கிராம மக்கள் குடிநீர் தொட்டியில் மலம் பூசப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்த போலீசார் மலத்தை பூசியது யார் என தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மீண்டும் ஒரு வேங்கைவயல் சம்பவம் அரங்கேறியுள்ளது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

News April 29, 2025

தி.மலை: பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்கள்

image

▶ படவேடு ரேணுகாம்பாள் கோயில் ▶ அத்திமலைப்பட்டு செல்லியம்மன் கோயில் ▶ ஆரணி பாப்பாத்தியம்மன் கோயில் ▶ ஈச்சம்பூண்டி கெங்கையம்மன் கோயில் ▶கடலாடி திரௌபதியம்மன் கோயில் ▶ சோழவரம் மாரியம்மன் கோயில் ▶ திருமணி பொன்னியம்மன் கோயில் ▶ தேசூர் ரேணுகாம்பாள் கோயில் ▶ போளூர் மகாகாளியம்மன் கோயில் ▶ மோசவாடி திரௌபதியம்மன் கோயில் ▶ வேட்டவலம் மாரியம்மன் கோயில். நீங்கள் செல்ல விரும்பும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News April 29, 2025

திருவண்ணாமலை குறைதீர் கூட்டத்தில் 840 மனுக்கள்

image

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் நடந்தது. அதில், டிஆர்ஓ ராம்பிரதீபன் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 840 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது, சம்பந்தப்பட்டதுறை அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

error: Content is protected !!