News April 29, 2025
19 வயது இளைஞர் தற்கொலை: குளித்தலை அருகே சோகம்!

குளித்தலை அருகே மேட்டுமருதூரைச் சேர்ந்தவர் அனில்குமார்(19). இவர் கடந்த மூன்று நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை குளித்தலை அருகே செல்லாண்டியம்மன் கோயில் அருகே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். சம்பவம் குறித்து தகவலறிந்த குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News October 28, 2025
கரூர்: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

கரூர் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News October 28, 2025
கரூரில் நாளை மின்தடை ..உங்கள் பகுதி இருக்கா?

தோகைமலை, மாயனுார், புகளூர் , அய்யர்மலை , பஞ்சப்பட்டி , நச்சலுார் , வல்லம், பாலவிடுதி, சிந்தாமணிபட்டி , கொசூர், பணிக்கம்பட்டி உள்ளிட்ட 11 துணை மின்நிலையங்களில் நிலையங்களில் நாளை (அக்.29) மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக மேற்குறிப்பிட்ட துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News October 28, 2025
கரூர்: இதை செய்தால் பணம் போகும்! உஷார்

சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், What’s App, SMS மூலம் போக்குவரத்து விதிமுறை அபராதம் எனக் கூறி வரும் போலி இ-சலான் செய்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய SMS-ல் உள்ள இணைப்புகளை அழுத்தினால் வங்கி கணக்குகள் காலியாகும் அபாயம் உள்ளது. எனவே உஷாராக இருக்க வேண்டும் என்றனர். (SHARE பண்ணுங்க)


