News April 29, 2025

வேலூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

image

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஸ்ரீ கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா வருகிற மே மாதம் 15-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் ஏனையோர் கலந்து கொள்ள வசதியாக மே 15 அன்று உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார். அதற்கு பதிலாக ஜூன் 14-ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News August 26, 2025

வேலூர்: B.E, B.Sc படித்தவர்களுக்கு அரசு வேலை

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் காலியாக உள்ள உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E, B.Sc,BCA, MCA,M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு நடத்தப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில் <<>>வரும் செ.9-க்குள் விண்ணப்பிக்கலாம். (SHARE)

News August 26, 2025

ஓட்டேரி ஏரியை தூர்வார கோரிக்கை

image

வேலூர் மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக ஓட்டேரி ஏரி உள்ளது. இந்த ஏரி 106 ஏக்கர் பரப்பளவுடன் சுமார் 140 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். இந்நிலையில் ஏரி முழுவதும் தற்போது செடி, கொடிகள், சீமைக்கருவேல மரங்களும் அதிகளவில் வளர்ந்து ஏரியை ஆக்கிரமித்துள்ளது. ஏரியில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி, ஏரியை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News August 26, 2025

வேலூர் மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

வேலூர் மாவட்ட காவல்துறையின் சார்பில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பல்வேறு பகுதிகளில் இரவு ரோந்து நடக்கிறது. வேலூர், காட்பாடி, அரக்கோணம், சூரியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் நேரடி கண்காணிப்பு செய்ய உள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!