News April 29, 2025

கடனாளியாக்கும் முதல்வர்: அரசு ஊழியர்கள் சங்கம்

image

சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் அறிவித்த 9 அறிவிப்புகள் கடன் சார்ந்த விஷயங்களாகவே இருப்பதாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. ஊழியர்களுக்கு சலுகை கொடுப்பது போல் ஏமாற்றி, மீண்டும் அரசுக்கே திரும்ப பெறக்கூடிய வகையில் கடனாளியாக்க முயல்வதாகவும், திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட பழைய ஓய்வூதியத்திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என்றும் அச்சங்கம் சாடியுள்ளது.

Similar News

News October 24, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடனறிதல் ▶குறள் எண்: 498
▶குறள்:
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.
▶பொருள்:சிறிய படை என்றாலும் அது தனக்குரிய இடத்தில் இருந்து போரிட்டால் பெரிய படையை வென்று விட முடியும்.

News October 24, 2025

வரலாற்றில் இன்று

image

*1801 – சுதந்திர போராட்ட வீரர்களான மருதுபாண்டிய சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட நாள்
*1857 – உலகின் முதலாவது கால்பந்தாட்ட அணி செபீல்டு, இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது
*1945 – ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது
*1980 – நடிகை லைலா பிறந்த தினம்
*1994 – கொழும்பு தேர்தல் கூட்டத்தில், நடந்த குண்டுவெடிப்பில் 52 பேர் கொல்லப்பட்டனர்

News October 24, 2025

மது விற்பனை குறைக்க அரசு முயற்சி: முத்துசாமி

image

தீபாவளியையொட்டி ₹790 கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி, திமுக அரசு மது விற்பனைக்கே முன்னுரிமை கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் பண்டிகை சமயங்களில் மது விற்பனையை அதிகரிக்க அரசு எந்த கூடுதல் நடவடிக்கையும் எடுக்கவில்லை என அமைச்சர் முத்துசாமி விளக்கம் கொடுத்துள்ளார். உண்மையில் அரசு மது விற்பனை குறைக்கவே முயற்சி எடுப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

error: Content is protected !!