News April 29, 2025
IPL BREAKING: RR அசத்தல் வெற்றி

இன்றைய ஐபிஎல் போட்டியில், 210 என்ற இமாலய இலக்கை அசால்ட்டாக எட்டியிருக்கிறது RR அணி. முதலில் பேட்டிங் செய்த GT அணி, 209 ரன்கள் எடுத்தது. ஷுப்மன் கில் அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்தார். அதன்பின், பேட்டிங் செய்த GT அணியின் வைபவ் சூர்யவன்ஷி, 38 பந்துகளில் 101 அடித்து ருத்ரதாண்டவம் ஆடினார். அவருடன் ஜோடி சேர்ந்து ஜெய்ஸ்வாலும் கலக்கியதால், வெறும் 15.5 ஓவர்களில் RR வெற்றி பெற்றது.
Similar News
News October 19, 2025
ஏமாற்றிய ரோஹித்!

14 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ரோஹித் அவுட்டாகி ஏமாற்றி இருக்கிறார். ஹேசில்வுட் பந்துவீச்சில் அவர் ரென்ஷாவிடம் கேட்ச்சாகி வெளியேறினார். தற்போது இந்திய அணி 13/1 ரன்களை எடுத்துள்ளது. கேப்டன் கில் 5 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
News October 19, 2025
முடிவுக்கு வந்தது AFG-PAK போர்!

ஒரு வாரமாக நடந்து வந்த ஆப்கன் – பாக் போர் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே இரு நாடுகள் இடையே ஒப்புக்கொள்ளப்பட்ட போர் நிறுத்தத்தை மீறி, ஆப்கானிஸ்தானில் 3 இடங்களில் குண்டுவீசி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதற்கு ஆப்கன் பதிலடி கொடுக்கப்படும் என கூறியதால், நிலைமை கைமீறி போய்விடக்கூடாது என்பதற்காக கத்தார் & துருக்கி மத்தியஸ்தம் செய்தது. இந்நிலையில், போர் முடிவுக்கு வந்துள்ளது.
News October 19, 2025
மூலிகை: மந்தாரையின் அசத்தல் மருத்துவ குணங்கள்!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, மந்தாரை செடியின் பட்டையை இடித்து, நீரில் சுண்டக்காய்ச்சி குடித்தால் அஜீரணக் கோளாறுகள் குணமாகும் ■மந்தாரை இலைகள் வாதநோய், தசைபிடிப்பு தொடர்புடைய வலிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது ■கக்குவான் இருமல், ஆஸ்துமா, மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி, சுவாச நோய்கள், ஆகியவற்றுக்கு மந்தாரை இலை சிறந்த மருந்து ■காயங்கள், கட்டிகளுக்கு மந்தாரை இலைச்சாறு மருந்தாகப் பயன்படுகிறது.