News April 29, 2025
ராணுவத்திற்கு நிதியுதவி செய்யுங்கள்: Scam Alert

இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இதை பயன்படுத்தி மோசடி நடைபெறுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போர் பதற்றம் காரணமாக இந்திய ராணுவத்திற்கு நிதி அளித்து உதவுங்கள் என வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மத்திய அரசு, இதுபோன்ற தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் என வலியுறுத்தியுள்ளது.
Similar News
News April 29, 2025
தீவிரவாத தாக்குதல்.. அஜித் கேட்பது இதைத்தான்!

பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் தான் தனது இதயம் இருப்பதாக அஜித் தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது என வேண்டிக் கொள்வதாகவும், சாதி, மதம் என இந்தியர்களுக்குள்ளேயே நாம் சண்டையிட்டுக் கொள்ள கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், அனைத்து சாதி, மதங்களையும் மதித்து ஒற்றுமையான, அமைதியான சமூகமாக நாம் வாழ வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
News April 29, 2025
கடனாளியாக்கும் முதல்வர்: அரசு ஊழியர்கள் சங்கம்

சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் அறிவித்த 9 அறிவிப்புகள் கடன் சார்ந்த விஷயங்களாகவே இருப்பதாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. ஊழியர்களுக்கு சலுகை கொடுப்பது போல் ஏமாற்றி, மீண்டும் அரசுக்கே திரும்ப பெறக்கூடிய வகையில் கடனாளியாக்க முயல்வதாகவும், திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட பழைய ஓய்வூதியத்திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என்றும் அச்சங்கம் சாடியுள்ளது.
News April 29, 2025
சம்மரில் சாப்பிடக் கூடாத உணவுகள்

கோடைக்காலத்தில் உடல் சூட்டை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்க்க டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். இறைச்சி வகைகள் குறிப்பாக சிவப்பு இறைச்சி சாப்பிடுவது மூளையில் வெப்பத்தை ஏற்படுத்தும். எண்ணெயில் பொறித்த உணவுகள் நீர்ச்சத்து குறைப்பாட்டை ஏற்படுத்தும். டீ, காபி குடிப்பது சோர்வு, தலைச்சுற்றல், வாயு பிரச்னைகளை ஏற்படுத்தும். காரசாரமான மசாலா அதிகம் சேர்த்த உணவுகள் மற்றும் மது அருந்துவதை தவிர்ப்பது நல்லது.