News April 29, 2025
திராவிட அரசியலே மத வெறி தான்: எச்.ராஜா விமர்சனம்

வெறுப்பு அரசியலின் மூலதனமாக இருப்பது திராவிட இயக்கங்கள் என்று எச்.ராஜா கடுமையாக சாடியுள்ளார். திமுகவில் 2 விக்கெட்டுகள் விழுந்திருக்கிறது. நீதிமன்ற தீர்ப்பால் முதல்வர் உளறிக் கொண்டிருக்கிறார். திராவிட அரசியலே மத வெறி தான். முதல்வர் பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். திராவிட கட்சியான அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டே அவர் இவ்வாறு பேசியது சர்ச்சையாகியுள்ளது.
Similar News
News November 6, 2025
ரொட்டி (பிஹார்) கருகிவிடும்: லாலு பிரசாத் யாதவ்

பிஹாரில் 20 ஆண்டு நிதிஷ் ஆட்சியை ரொட்டியுடன் லாலு பிரசாத் யாதவ் ஒப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு ரொட்டியை திருப்பி போடவில்லை என்றால் கருகிவிடும். அதுபோல, 20 ஆண்டுகள் என்பது நீண்ட காலம், எனவே ஆட்சி மாற்றம் என்பது அவசியமாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், புதிய பிஹாரை உருவாக்க இளைஞர்கள் (தேஜஸ்வி) கையில் ஆட்சி அதிகாரம் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News November 6, 2025
₹2,708 கோடியை அள்ளி கொடுத்த ஷிவ் நாடார்

இந்தியாவில் நடப்பாண்டில் அதிக நன்கொடை வழங்கிய தொழிலதிபர்களின் பட்டியலை EdelGive Hurun வெளியிட்டுள்ளது. இதில், ₹2,708 கோடி நன்கொடை வழங்கி ஷிவ் நாடார் முதலிடத்தில் உள்ளார். நாளொன்றுக்கு சராசரியாக ₹7.4 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். கல்வி, கலை, கலாசார துறைகளில் அதிகமாக நன்கொடை வழங்கியுள்ளார். அவருக்கு அடுத்ததாக, முகேஷ் அம்பானி ₹626 கோடி, பஜாஜ் குடும்பம் ₹446 கோடி வழங்கியுள்ளனர்.
News November 6, 2025
பிஹாரில் வாக்குப்பதிவு நிறைவு

பிஹாரில் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி, 60.13% வாக்குகள் பதிவாகியுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாலை 5 மணிக்கே வாக்குப்பதிவு நிறைவடைந்தது. அதிகபட்சமாக பெகுசராய் தொகுதியில் 67.32%, குறைந்தபட்சமாக ஷேக்புரா தொகுதியில் 52.36% வாக்குகள் பதிவாகியுள்ளது.


