News April 28, 2025
குரு பெயர்ச்சி: அதிர்ஷ்ட யோகம் பெறும் 5 ராசிகள்

வரும் மே 14-ல் குரு பகவான் மிதுன ராசிக்கு செல்வதால் நன்மைகள் பெறும் ராசிகள்: *மேஷம்: செல்வமும் மகிழ்ச்சியும் பெருகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். *கன்னி: தொழிலில் வெற்றி. வருமானம் உயரும். குடும்ப வாழ்க்கை சிறக்கும். *துலாம்: கல்வி மேம்படும். தொழில், வேலையில் முன்னேற்றம். *கும்பம்: குழந்தை மூலம் மகிழ்ச்சி, காதல் உறவு மேம்படும். வருமானம் உயரும். *மீனம்: தொழிலில் முன்னேற்றம், நிதிநிலை மேம்படும்.
Similar News
News April 29, 2025
பஹல்காம் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பு?

ஹமாஸ் அமைப்பு உலகெங்கும் உள்ள தீவிரவாதிகளுக்கு முன்னுதாரணமாக மாறிவிட்டதாக இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் ரீவன் அசார் தெரிவித்துள்ளார். இஸ்ரேலை தாக்கும்போது, அதை லைவ் வீடியோவாக வெளியிட்டது உலக தீவிரவாதிகளுக்கு இன்ஸ்பிரேஷனாக அமைந்ததாகவும், அதன் பிறகு அந்த அமைப்பினர் PoK-க்கு அழைக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கும், ஹமாஸ் தாக்குதலுக்கும் ஒற்றுமை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News April 29, 2025
150 ஊழியர்களை சஸ்பெண்ட் செய்த BLINKIT.. ஏன் தெரியுமா?

நாளை மறுநாள் உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், 150 ஊழியர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது BLINKIT நிறுவனம். அதீத வெப்பத்தின் காரணமாக மதியம் 12 – 4 மணி வரை இடைவேளை, காத்திருப்பு இடங்களில் நிழல் கூடாரங்கள், தண்ணீர் மற்றும் ஃபேன், சம்மருக்கு ஏற்ற காட்டன் யூனிஃபார்ம்கள் ஆகியவற்றை கேட்டு போராடியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக, Gig ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது பற்றி உங்கள் கமெண்ட் என்ன?
News April 29, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஏப்ரல் 29 – சித்திரை- 16 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:30 AM – 2:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶ திதி: துவிதியை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶ பிறை: வளர்பிறை.