News April 28, 2025

IPL-இல் இனி 94 போட்டிகள்

image

2028 IPL தொடரில் இருந்து 94 லீக் போட்டிகள் நடத்த திட்டமிட்டிருப்பதாக அதன் தலைவர் அருன் துமல் தெரிவித்துள்ளார். 8 IPL அணிகள் மட்டுமே இருந்தபோது, ஒவ்வொரு அணியும் மற்ற 7 அணிகளுடன் 2 லீக் போட்டிகளில் விளையாடின. ஆனால், 10 அணிகள் வந்தபின், இந்த முறை பின்பற்றப்படாமல் 70 போட்டிகள் மட்டுமே நடத்தப்படுகிறது. இது நியாயமான நடைமுறை அல்ல என்று புகார் எழுந்ததால் மறு பரிசீலனை செய்யப்படவுள்ளது.

Similar News

News January 12, 2026

வரலாறு காணாத குறைவு.. மிகப்பெரிய தாக்கம்

image

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்து, ₹90.23-ஆக உள்ளது. டாலர் மதிப்பு உயர்வதால், இந்தியாவின் இறக்குமதி செலவினம் அதிகரிக்கும். இதன்காரணமாக, சமையல் எண்ணெய்கள், பருப்பு, உரங்கள், எரிவாயு ஆகியவற்றுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். அதுமட்டுமல்லாமல், தங்கம், வெள்ளி விலையும் அதிகரிக்கும். இது அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதிக்கும்.

News January 12, 2026

அதிக ஆபத்தை ஏற்படுத்தும் கடும்குளிர்!

image

தமிழகத்தில் கடும்குளிரால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நாடு முழுவதும் கடும்குளிரின் தீவிரம் இன்னும் சில நாள்களுக்கு நீடிக்கும் என்று IMD தெரிவித்துள்ளது. பொதுவாக குளிர்காலங்களில், ரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம். இதன்காரணமாக, வயதானவர்கள், நோயுற்றவர்கள் கவனமுடன் இருக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.

News January 12, 2026

முன்னாள் துணை ஜனாதிபதி AIIMS-ல் அனுமதி

image

முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் உடல்நலக்குறைவால் டெல்லி AIIMS-ல் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு என்ன பிரச்னை என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும், நாளை அவரின் உடல்நிலை மற்றும் டிஸ்சார்ஜ் தொடர்பாக AIIMS அறிக்கை வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!