News April 28, 2025
முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

பிரபல தொழிலதிபர் வேலுவின் தாயார் கோமதி உடல்நலக்குறைவால் காலமானார். இந்த செய்தியை கேட்ட உடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலுவின் இல்லத்திற்கு நேரில் சென்று கோமதியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். இதன்பின், சோகத்தில் மூழ்கியிருந்த குடும்பத்தினரை ஒவ்வொருவருக்கும் தனது ஆறுதலை தெரிவித்தார்.
Similar News
News August 30, 2025
அண்ணாமலையை அருகே அழைத்த இபிஎஸ்..

ஜி.கே.மூப்பனாரின் பிறந்தநாள் நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இதில் நிர்மலா சீதாராமனுடன் இணைந்து, எடப்பாடி பழினிசாமி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழா மேடையில், எதிரும் புதிருமாக இருந்துவந்த அண்ணாமலையும், EPS-ம் அருகருகே அமர்ந்திருந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் கவனத்தை பெற்றுள்ளது.
News August 30, 2025
உதயநிதியை துணை கூத்தாடி என கூறலாமா? பேரரசு கேள்வி

விஜய் அரசியலுக்கு வந்துள்ளதால் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறியுள்ளதாக தெரிவித்த இயக்குநர் பேரரசு, சிலர் தீபாவளிக்கு கூட வாழ்த்து கூறுவதில்லை என திமுகவை மறைமுகமாக சாடினார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய் கூத்தாடி என்றால், உதயநிதியும் கூத்தாடிதான் என்றார். அத்துடன், உதயநிதி துணை முதல்வராக உள்ளதால், அவரை துணை கூத்தாடி என அழைக்கலாமா என்றும் காட்டமாக கேள்வி எழுப்பினார்.
News August 30, 2025
BREAKING: மீண்டும் ஒன்றிணையும் அதிமுக?

மீண்டும் ADMK ஆட்சி மலர அனைவரும் கைகோர்க்க வேண்டும் என சசிகலா கூறியுள்ளார். ஆட்சியமைக்க ஒன்றுபட்ட, வலிமையான அதிமுகதான் ஒரே தீர்வு என கூறிய அவர், நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்றும் தெரிவித்தார். மேலும், அனைவரும் ஒன்றிணைந்து 2026 தேர்தலை அசுர பலத்துடன் சந்திப்போம் எனவும் அழைப்பு விடுத்துள்ளார். ஏற்கெனவே இதே கருத்தை OPS-ம் முன்வைத்திருந்தார். உங்கள் கருத்து?