News April 28, 2025

நாமக்கல்: கறிக்கோழி விலையில் மாற்றம் இல்லை

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த (ஏப்.25) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.8 உயர்த்தப்பட்டு ஒரு கிலோ ரூ.88 நிர்ணயிக்கப்பட்டது. இன்று (ஏப்-28) நடைபெற்ற கூட்டத்தில் கறிக்கோழி விலை மாற்றம் செய்யவில்லை. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.85- ஆகவும் அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

Similar News

News October 27, 2025

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள் முதல் விலை 525 காசுகளாக இருந்து வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 530 காசுகளாக அதிகரித்து உள்ளது.
கறிக்கோழி கிலோ ரூ.101-க் கும், முட்டைக்கோழி கிலோ ரூ.110-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை

News October 27, 2025

நாமக்கல்: B.E / B.Tech / B.Sc முடித்தவர்களா? ரூ.1,40,000 சம்பளம்

image

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Engineer (PE) பணியிடங்களை நிரப்ப தகுதியான 340 நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. B.E / B.Tech / B.Sc முடித்த 21 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.40,000 – 1,40,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது, விருப்பமுள்ளவர்கள் நவ-14ஆம் தேதிக்குள்ள <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News October 27, 2025

நாமக்கல் ரயில் பயணிகளின் கவனத்திற்கு !

image

நாமக்கலில் இருந்து நாளை (அக்.28) இரவு 8:45 மணியளவில் ஓசூர், பங்காரபேட், கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ, மாண்டியா, மைசூர் போன்ற பகுதிகளுக்கு செல்ல 06238 இராமநாதபுரம் – மைசூர் ரயிலிலும் டிக்கெட்டுகள் உள்ளன. பொதுமக்கள் இந்த ரயில்களை முன்பதிவு செய்து பயன்படுத்தி பயனடையுமாறு ரயில்வே கோட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

error: Content is protected !!