News April 28, 2025
ஹாலிவுட் நடிகர் டேமியன் தாமஸ் காலமானார்

ஹாலிவுட் நடிகர் டேமியன் தாமஸ் (83) காலமானார். பிரிட்டனைச் சேர்ந்த அவர், டிவின்ஸ் ஆப் ஈவில், SHOGUN, பைரேட்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதில் ‘டிவின்ஸ் ஆப் ஈவில்’ படம், அவருக்கு பெரும் பெயரை பெற்றுத் தந்தது. supranuclear palsy எனும் ஒருவகை வாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவர், திடீரென மரணமடைந்துள்ளார். இதையடுத்து அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News April 29, 2025
லியோ டால்ஸ்டாய் பொன்மொழிகள்

*பொறுமையும் நேரமுமே மிகவும் சக்தி வாய்ந்த வீரர்களுக்கு இணையானது. *வாழ்க்கையில் முழு திருப்தியை எதிர்பார்க்கின்றீர்களா? உங்களால் ஒருபோதும் மனநிறைவுடன் இருக்க முடியாது. *வாழ்வில் ஏற்படும் சிறு சிறு மாற்றங்களே, வாழ்க்கையை உண்மையாக வாழ வைக்கின்றன. *எங்கு எளிமை, நேர்மை மற்றும் உண்மை இல்லையோ, அங்கு உயர்வும் மேன்மையும் இல்லை. *நமக்கு எதுவும் தெரியாது என்பதை உணர்வதே உண்மையான ஞானம்.
News April 29, 2025
கணவனுக்கு நேர்ந்த சோகம்.. பேரனுடன் ஓடிப்போன மனைவி!

உ.பி.யில் இந்திராவதி (50) என்ற பெண்மணி, தனது கணவன், 4 குழந்தைகளை கைவிட்டு பேரன் ஆசாத்துடன் (30) ஓடிப்போய் திருமணம் செய்த ஷாக் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கணவர் புகார் அளித்த நிலையில், இருவரும் வயதுக்கு வந்தவர்கள் என்பதால் இணையை தேர்ந்தெடுப்பதற்கு உரிமை இருப்பதாக கூறி, போலீசார் புகாரை ஏற்க மறுத்துவிட்டனர். காதலுக்கு கண் இல்லை என்பார்கள், அதற்காக இப்படியுமா.
News April 29, 2025
எந்த முகத்தை வைத்து மாநில அந்தஸ்து கேட்பது? உமர்

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு எந்த முகத்தை வைத்துக் கொண்டு மாநில அந்தஸ்து கேட்பது என J&K முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். மாநில சட்டப்பேரவையில் பேசிய அவர், 26 அப்பாவி உயிர்கள் பறிபோன நேரத்தில் மாநில அந்தஸ்து கேட்பது வெட்கக்கேடானது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், வருங்காலத்தில் இது பற்றி விவாதிக்கலாம், ஆனால் இந்த தருணத்தில் அதுபற்றி பேசக்கூடாது எனவும் கூறியுள்ளார்.