News April 28, 2025
சென்னையில் பாகிஸ்தானியர் காலமானார்

சென்னையில் ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பாகிஸ்தானியர் காலமானார். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானியர்கள் உடனே வெளியேற வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டிருந்தன. இந்நிலையில், உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த பாகிஸ்தானியர் உயிரிழந்தார். இறந்த நபரின் உடலையும், அவரின் தாயையும் பாகிஸ்தானுக்கு அனுப்ப அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News December 2, 2025
தேமுதிகவின் இருண்ட காலம் அகன்றுவிட்டது: பிரேமலதா

தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்கத் தயாராக உள்ளதாக பிரேமலதா தெரிவித்துள்ளார். மேலும் தேமுதிகவின் இருண்ட காலம் அகன்றுவிட்டதாகவும், இனி பிரகாசம்தான் எனவும் கூறியுள்ளார். எங்களது தொண்டர்களை அரசாங்க பதவியில் அமரவைத்து அழகு பார்க்க வேண்டுமென்பது தனது ஆசை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
News December 2, 2025
நள்ளிரவு 1 மணி வரை 7 மாவட்டங்களில் மழை பெய்யும்

நள்ளிரவு 1 மணி வரை 7 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தேவையின்றி வெளியே செல்வதை தவிர்த்திடுங்க மக்களே. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதா?
News December 2, 2025
கன்ட்ரோல் ரூமில் ஷூட்டிங் நடத்தும் CM: EPS

டிட்வா புயலால் ராமேஸ்வரமே மூழ்கியபோது, இலங்கைக்கு வேண்டிய உதவிகளை செய்வேன் என CM ஸ்டாலின் வாய்ச் சவடால் அடிப்பதாக EPS விமர்சித்துள்ளார். மழைக்காலத்தில் கன்ட்ரோல் ரூமில் உட்கார்ந்து CM ஷூட்டிங் நடத்துவதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் வெள்ள நீரால் சேதமடைந்த விவசாய நிலங்களை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தியுள்ளார்.


