News April 28, 2025
நாமக்கல் மலைக்கோட்டை சிறப்புகள்!

நாமக்கல் நகருக்கு புகழையும், பெருமையும் சேர்ப்பது நாமக்கல் மலைக்கோட்டை. இது 75 மீட்டர் (246 அடி) உயரம் கொண்ட ஒரு பெரிய பாறையின் மேல் கட்டப்பட்டுள்ளது. சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்த கோட்டையில் நரசிம்மர் கோயிலும், தர்காவும் உள்ளது. நாமக்கல்லில் பிரபலமான சுற்றுலா தலமாகவும் மலைக்கோட்டை விளங்குகிறது. ஆங்கிலேயரை எதிர்த்து போரிட, திப்பு சுல்தான் கோட்டையை பயன்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது. SHARE IT!
Similar News
News April 28, 2025
நாமக்கல்: முட்டை விலை 10 பைசா உயர்வு!

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் இன்று (ஏப் 28) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 10 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.30 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டது.
News April 28, 2025
நாமக்கல்: கறிக்கோழி விலையில் மாற்றம் இல்லை

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த (ஏப்.25) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.8 உயர்த்தப்பட்டு ஒரு கிலோ ரூ.88 நிர்ணயிக்கப்பட்டது. இன்று (ஏப்-28) நடைபெற்ற கூட்டத்தில் கறிக்கோழி விலை மாற்றம் செய்யவில்லை. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.85- ஆகவும் அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
News April 28, 2025
கடன் சுமை நீக்கும் நாமக்கல் கோயில்!

நாமக்கல் மாவட்டம் புதன் சந்தை அருகே மிகவும் பிரசித்தி பெற்ற நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சுமார் 2600 அடி உயரம் உள்ள மலையில் அமைத்துள்ளது. இங்கு உள்ள மூலவரை தரிசித்தால் கடன் சுமை நீங்கும். மேலும், திருப்பதி பெருமானை தரிசித்த பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதை கடன் சுமையில் இருக்கும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.