News April 28, 2025
3 நாள்களில் 1 சவரன் தங்கம் ₹2,800 சரிவு

ஏப்.22-ல் <<16240956>>தங்கம்<<>> விலை 1 கிராம் ₹9,290ஆகவும், 1 சவரன் ₹74,320 ஆகவும் அதிகரித்தது. அதற்கடுத்து 23, 24-ம் தேதிகளில் 1 கிராம் தங்கம் ₹285-ம், 1 சவரன் ₹2,280-ம் குறைந்தது. அதன்பிறகு 3 நாள்களாக விலையில் மாற்றமில்லை. இந்நிலையில் இன்று கிராமுக்கு ₹65-ம், சவரனுக்கு ₹520-ம் குறைந்துள்ளது. அதாவது, 3 நாள்களில் 1 கிராம் 350-ம், 1 சவரன் ₹2,800-ம் வீழ்ச்சியடைந்துள்ளது.
Similar News
News August 24, 2025
இதுதான் பங்குச்சந்தை யுக்தியா? என்ன நடந்தது?

இந்தியாவின் பட்டியலிடப்பட்ட ஒரே ஆன்லைன் கேமிங் நிறுவனம் Nazara Technologies. இந்நிறுவனத்தின் ₹334 கோடி மதிப்பிலான பங்குகளை கடந்த ஜூனில், பிரபல முதலீட்டாளர் ரேகா ஜுன்ஜுவாலா விற்றுள்ளார். ஆன்லைன் கேமிங் மசோதா தாக்கலாவதற்கு சில மாதங்களுக்கு முன்பு இவ்வாறு அவர் செய்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. இதனிடையே கடந்த 5 நாள்களாக இந்நிறுவனத்தின் பங்குகள் 15.85% அளவு குறைந்துள்ளன.
News August 24, 2025
சென்னையில் நடிகை கைது

சென்னையில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற புகாரில் ஆந்திராவைச் சேர்ந்த துணை நடிகை நாகம்மா உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தந்தை இறந்த நிலையில், தாய் வேறு ஒருவரை திருமணம் செய்துள்ளார். இதனால், ஆதரவற்று இருந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி நாகம்மா இந்த கொடுமையை செய்துள்ளார். தகவலறிந்து சென்ற போலீஸ் 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
News August 24, 2025
விசிலடிச்சான் குஞ்சாகி விட்டாரா விஜய்? அமைச்சர்

தவெக மாநாட்டில் ‘ஸ்டாலின் Uncle’ என முதல்வரை விஜய் குறிப்பிட்டதற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில், 50 ஆண்டு பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான முதல்வரை விஜய் இவ்வாறு விமர்சித்திருப்பதை ஏற்க முடியாது என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தவெக தொண்டர்களே மெச்சூரிட்டி ஆன நிலையில், விஜய் விசிலடிச்சான் குஞ்சாகி விட்டாரா என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். உங்கள் கருத்து என்ன?