News April 28, 2025
நெட்பிளிக்ஸ், அமேசானுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

சென்சார் கட்டுப்பாடு இல்லாததால், OTT-ல் வெளிவரும் பல தொடர்கள், படங்களில் ஆபாசக்காட்சிகள் அதிகமாக இருப்பதாக தொடர் குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன. இது குறித்த மனு மீதான விசாரணையில், விளக்கம் அளிக்க அமேசான், நெட்பிளிக்ஸ், உள்ளிட்ட OTT தளங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், விசாரணையின் போது இந்த தளங்களுக்கும் சமூக பொறுப்பு இருப்பதாகவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News April 28, 2025
உயரும் ரபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை

பிரான்ஸிடமிருந்து ₹64,000 கோடி மதிப்பீட்டில் மேலும் 26 ரபேல் போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். கடந்த 9-ம் தேதி இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கி இருந்தது. ஏற்கெனவே இந்தியாவிடம் 36 ரபேல் போர் விமானங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
News April 28, 2025
உங்களுக்கு பர்சனல் லோன் இருக்கா? இத கவனியுங்க!

பர்சனல் லோனை விரைவாக அடைக்க: ◆ஆண்டுக்கு ஒரு மாத EMI-யை கூடுதலாக செலுத்த முயற்சியுங்கள். இது அசலுடன் சேர்த்து வட்டித் தொகையையும் குறைக்கும் ◆உதாரணத்துக்கு EMI ₹4375.30 என்றால், அதை ரவுண்டாக (₹4500) செலுத்த பழகுங்கள் ◆குறைந்த வட்டிக்கு மாறுங்கள்: வாங்கிய லோனை விட குறைந்த வட்டி கேட்கும் லோன் திட்டங்களில் (உ-ம்: பிபிஎப், வேறு லோன்கள்) கடன்பெற்று இதை அடையுங்கள். இதற்கு நீங்கள் வங்கியில் பேசவேண்டும்.
News April 28, 2025
நான் ராஜினாமா செய்ய தயார்: செல்வப்பெருந்தகை சவால்

நீட் தேர்வை பாஜக தான் சட்டமாக கொண்டுவந்தது; காங்கிரஸ் இல்லை என்று காங்., கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இந்த சட்டம் காங்., ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது என்று நிரூபித்தால், நான் ராஜினாமா செய்கிறேன் என்று சவால் விடுத்த அவர், பாஜக ஆட்சியில் என்று நிரூபித்தால் நீங்கள்( பாஜக எம்.எல்.ஏ.க்கள்) ராஜினாமா செய்ய தயாரா? என்று கேள்வி எழுப்பினார்.