News April 28, 2025
ஜவாஹிருல்லா வழக்கில் இடைக்கால தடை

சட்டவிரோதமாக வெளிநாடுகளில் இருந்து ரூ.1.50 கோடி நிதி பெற்றதாக பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லாவுக்கு கடந்த 2011ஆம் ஆண்டு குற்றவியல் நீதிமன்றம் ஓராண்டு சிறைத்தண்டனை விதித்தது. அதை எதிர்த்து ஜவாஹிருல்லா ஐகோர்ட்டில் முறையிட அங்கும் தண்டனை உறுதிசெய்யப்பட அதைத்தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஓர் ஆண்டு சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
Similar News
News April 29, 2025
தஞ்சை அஞ்சலகங்களில் ஆதார் சிறப்பு முகாம்

தஞ்சை தலைமை அஞ்சல் அலுவலகங்களில் ஆதார் மற்றும் சர்வதேச தபால் சேவை சிறப்பு முகாம் நாளையுடன் (ஏப்.30) முடிவடைகிறது. இதில் பெயர், முகவரி, செல்போன் எண் திருத்தம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை அந்தந்த கோட்டத்தில் உள்ள தபால் நிலையங்கள் மூலம் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதனை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.
News April 29, 2025
விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டு தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டம், தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயக்கம் திட்டம், பனை மேம்பாட்டு இயக்கம் ஆகிய திட்டங்களில் விவசாயிகள் பயன் பெற tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.
News April 29, 2025
அரசு பேருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு

கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் மீது கும்பகோணத்திலிருந்து அய்யாவாடி நோக்கி சென்ற அரசு பேருந்து மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் இறந்த நபர் யார் – எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து நாச்சியார் கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.