News April 28, 2025
கண்ணகி-முருகேசன் வழக்கு: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே 22 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற கண்ணகி-முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் குற்றவாளிகளான கந்தவேல், ஜோதி, வெங்கடேசன், மணி ஆகியோர் தொடர்ந்த மேல்முறையீட்டில் இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து, மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது.
Similar News
News April 28, 2025
பட்டா, சிட்டாவுக்கு இனி சிரமம் இல்லை

உங்கள் நிலத்தின் சர்வே எண், பட்டா விவரங்களை அறிய தமிழக அரசால் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. செல்போனில் TamilNilam Geo-Info என்ற செயலியை பதிவிறக்கம் செய்தால் போதும். அதில் நாம் தற்போது எந்த இடத்தில் இருக்கின்றோமோ அந்த கூகுள் மேப்புடன், சர்வே எண் ஆகிய விவரங்கள் தெரியும். இதில் வீடு, மனை உள்ளிட்ட ஆவணங்களை மக்கள் எளிதாக சரிபார்த்து கொள்ளலாம். அனைவருக்கும் Share செய்து பயனடையுங்கள்..
News April 28, 2025
கண்ணகி-முருகேசன் வழக்கு: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே 22 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற கண்ணகி-முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் குற்றவாளிகளான கந்தவேல், ஜோதி, வெங்கடேசன், மணி ஆகியோர் தொடர்ந்த மேல்முறையீட்டில் இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து, மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது.
News April 28, 2025
கடலூரில் உள்ள காசிக்கு நிகரான கோயில்

கடலூரில் உள்ள பாடலீஸ்வரர் கோயில் தேவார பாடல் பெற்ற நடுநாட்டு தலங்களில் 18ஆவது தலமாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காசியில் 16 முறை இறைவனை வணங்குவதும், இங்கு ஒரு முறை வணங்குவதும் சமம் என நம்பப்படுகிறது. திருவண்ணாமலையில் 8 முறையும், சிதம்பரத்தில் 3 முறையும், இத்தலத்தில் ஒருமுறையும் வணங்குவது சிறப்பாகும். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க..