News April 28, 2025
விஜய் சங்கரின் மாஸ் ரெக்கார்டை உடைத்த கோலி!

நடப்பு ஆண்டில் விஜய் சங்கரின் ஒரே சாதனை DC-க்கு எதிராக 43 பந்துகளில் அரைசதம் அடித்தது தான். இதுதான் IPL 2025-ல் மிகவும் மெதுவான அரைசதமாக இருந்தது. மோசமான ரெக்கார்ட் என்றாலும், அவரால் இந்த சீசனில் ஒரே ஆறுதல் ரசிகர்களுக்கு இதுமட்டுமே. ஆனாலும், அதுவும் இருக்கக்கூடாது என கோலி முடிச்சி விட்டார். DC-க்கு எதிரான மேட்சில் அவர் 45 பந்துகளில் அரைசதம் அடித்து விஜய் சங்கரின் ரெக்கார்டை உடைத்து விட்டார்.
Similar News
News December 24, 2025
ஜனவரி 1 முதல் சம்பளம் உயருகிறது!

ஜனவரி 1-ம் தேதி முதல் 8-வது ஊதியக் குழு அமலுக்கு வர வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனால் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 20% – 35% வரை உயரலாம். கடந்த 2025 நவம்பரில் 8-வது ஊதியக் குழு அமைக்கப்பட்ட நிலையில், உயர்த்தப்பட்ட சம்பளம் & ஓய்வூதியம் 2026 ஜனவரியிலிருந்து அமல்படுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
News December 24, 2025
Air Purifier மீதான GST-யை கட் பண்ணுங்க: HC

டெல்லியில் காற்றுமாசு உச்சத்தில் இருந்து வரும் நிலையில், மத்திய அரசின் செயல்பாடுகள் மீது டெல்லி ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது. Air Purifier-ஐ மருத்துவ சாதனமாக கருதி, 18%-ல் இருந்து 5% ஆக GST-ஐ குறைக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஐகோர்ட் விசாரித்தது. அப்போது, தூய்மையான காற்றை வழங்க முடியாவிட்டால், குறைந்தபட்சம் Air Purifier-கள் மீதான வரியையாவது குறையுங்கள் என்று காட்டமாக தெரிவித்துள்ளது.
News December 24, 2025
இயற்கை விவசாயிகளாக மாறிய தோனி, சல்மான் கான்

இந்திய முழுவதும் கொண்டாடப்படும் நட்சத்திரமான தோனி, விவசாயத்தின் மீது நாட்டம் கொண்டவர் என்பது பலரும் அறிந்ததே. அவ்வப்போது அவர் டிராக்டர் ஓட்டும் வீடியோக்கள் SM-ல் டிரெண்டாவது வழக்கம். இந்நிலையில் அவருடன் இணைந்து பாலிவுட் ஸ்டாரான சல்மான்கானும் விவசாயியாக மாறியுள்ளார். இருவரும் வயலில் சேற்றுடன் இருக்கும் போட்டோ வைரலான நிலையில், கோடீஸ்வர விவசாயிகள் இவர்கள்தான் என பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.


