News April 28, 2025
போர் பதற்றம்… கூடும் நாடாளுமன்ற நிலைக்குழு

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே <<16241905>>பதற்றம் <<>>நீடித்து வருகிறது. இதனிடையே பாதுகாப்பு துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு இன்று மாலை கூடுகிறது. இதில் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
Similar News
News August 26, 2025
வயிற்று தசைகளை வலுவாக்கும் அர்த்த நவாசனம்!

✦வயிற்றுத் தசைகளை வலுவாக்கவும், வயிற்றுக் கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது.
➥தரையில் கால்களை நீட்டி, முதுகை நேராக இருக்கும்படி உட்காரவும்.
➥முதுகை சாய்த்து, கால்களின் முட்டியை மடக்கி, தலை & பாதங்களை ஒரே நேர்கோட்டில் இருக்கும்படி உட்காரவும்.
➥அடிவயிற்றின் தசைகளை இறுக்கி, மார்பை முடிந்தவரை மேல் நோக்கி உயர்த்தவும். இந்தநிலையில், 15- 20 விநாடிகள் வரை, இருந்துவிட்டு பிறகு பழைய நிலைக்கு திரும்பவும்.
News August 26, 2025
விஜய்யை சீமான் கடுமையாக எதிர்ப்பது ஏன்?

திரைக்கவர்ச்சியை கொண்டு மக்களை விஜய் திசை திருப்புவதை ஏற்க முடியாது என்றும், அதனால் தான் சீமான் விஜய்யை எதிர்ப்பதாக நாதகவை சேர்ந்த இடும்பாவனம் கார்த்திக் தெரிவித்துள்ளார். கேரளாவிலும், கர்நாடகாவிலும் தனது படம் ஓட வேண்டுமென்பதற்காக முல்லை பெரியாறு, காவிரி பிரச்னைகள் குறித்து விஜய் பேச மறுப்பதாகவும் விமர்சித்தார். விஜய் மட்டுமில்லை அஜித், SKவும் மாநாடு நடத்தினாலும் இதேபோன்று கூட்டம் வருமென்றார்.
News August 26, 2025
பெண் ரூபத்தில் விநாயகர் காட்சி தரும் கோயில்!

முழுமுதற் கடவுளான விநாயகர் பெண் ரூபத்தில் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் என்ற ஊரில் அமைந்துள்ள, தாணுமாலயன் கோயிலில் காட்சி தருகிறார். இக்கோயிலின் ஒரு தூணில் பெண் வடிவில் இருக்கும் பிள்ளையாருக்கு விநாயகி, கணேஷ்வரி, விக்னேஷ்வரி என பல்வேறு பெயர்கள் உள்ளன. பெண் அணிகின்ற ஆபரணங்களோடு ஒரு காலை ஊன்றி, மறுகாலை மடக்கி, புடவையில் பெண் தெய்வமாக விநாயகர் காட்சி தருகிறார். SHARE IT.