News April 28, 2025
திமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்க காங்கிரஸ் திட்டம்?

திமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்க காங்கிரஸ் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. செல்வபெருந்தகை முன்னிலையில் அண்மையில் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடந்தது. இதில் பேசிய மாவட்ட தலைவர்கள், திமுகவிடம் 60 தொகுதிகளை கேட்க வேண்டும், துணை முதல்வர் பதவி கேட்க வேண்டும், திமுக தரவில்லையேல் அக்கட்சித் தலைமையிலான கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
Similar News
News April 28, 2025
முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

பிரபல தொழிலதிபர் வேலுவின் தாயார் கோமதி உடல்நலக்குறைவால் காலமானார். இந்த செய்தியை கேட்ட உடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலுவின் இல்லத்திற்கு நேரில் சென்று கோமதியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். இதன்பின், சோகத்தில் மூழ்கியிருந்த குடும்பத்தினரை ஒவ்வொருவருக்கும் தனது ஆறுதலை தெரிவித்தார்.
News April 28, 2025
நேற்று வரை இலை இன்று களையா? சீறும் காளியம்மாள்!

நேற்று வரை இலையாக இருந்தவர்கள் இன்று களையாகத் தெரிகிறார்களா என சீமானிடம் காளியம்மாள் சீறியுள்ளார். நாதகவில் இருந்து விலகிய பிறகு முதல் முறையாகத் தனியார் நாளிதழுக்கு நேர்காணல் அளித்துள்ள அவர், பணம், பதவி, அந்தஸ்துக்காக நாதகவில் யாரும் சேரவில்லை எனக் கூறியுள்ளார். மேலும், களையென நினைத்து விளைந்த நல்ல பயிர்களைப் பிடுங்கிப் போட்டு விடக்கூடாது என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
News April 28, 2025
மே 3-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

CM ஸ்டாலின் தலைமையில் மே 3-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் காலை 10.30 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். கூட்டத்தில் கட்சியின் ஆக்கப்பூர்வமான பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.