News April 28, 2025

சென்செக்ஸ் 1,022 புள்ளிகள் உயர்வு

image

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,022 புள்ளிகள் உயர்ந்து 80,234 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 292 புள்ளிகள் உயர்ந்து 24,331 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ், சன் பார்மா, நெஸ்லே ஆகியவை நிஃப்டியில் அதிக லாபம் பெற்றுள்ளன.

Similar News

News April 28, 2025

நேற்று வரை இலை இன்று களையா? சீறும் காளியம்மாள்!

image

நேற்று வரை இலையாக இருந்தவர்கள் இன்று களையாகத் தெரிகிறார்களா என சீமானிடம் காளியம்மாள் சீறியுள்ளார். நாதகவில் இருந்து விலகிய பிறகு முதல் முறையாகத் தனியார் நாளிதழுக்கு நேர்காணல் அளித்துள்ள அவர், பணம், பதவி, அந்தஸ்துக்காக நாதகவில் யாரும் சேரவில்லை எனக் கூறியுள்ளார். மேலும், களையென நினைத்து விளைந்த நல்ல பயிர்களைப் பிடுங்கிப் போட்டு விடக்கூடாது என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

News April 28, 2025

மே 3-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

image

CM ஸ்டாலின் தலைமையில் மே 3-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் காலை 10.30 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். கூட்டத்தில் கட்சியின் ஆக்கப்பூர்வமான பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

News April 28, 2025

ஹாலிவுட் நடிகர் டேமியன் தாமஸ் காலமானார்

image

ஹாலிவுட் நடிகர் டேமியன் தாமஸ் (83) காலமானார். பிரிட்டனைச் சேர்ந்த அவர், டிவின்ஸ் ஆப் ஈவில், SHOGUN, பைரேட்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதில் ‘டிவின்ஸ் ஆப் ஈவில்’ படம், அவருக்கு பெரும் பெயரை பெற்றுத் தந்தது. supranuclear palsy எனும் ஒருவகை வாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவர், திடீரென மரணமடைந்துள்ளார். இதையடுத்து அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!