News April 28, 2025
மகன் குறித்த சர்ச்சை கருத்து.. கடுப்பான பும்ரா மனைவி

MI போட்டியை நேரில் காண வந்த பும்ரா மனைவி சஞ்சனா பும்ரா விக்கெட் எடுக்கும் போது துள்ளிக்குதித்தார். ஆனால் உலகம் அறியாத அவர்களது ஒன்றரை வயது மகன் அங்கத் அமைதியாக இருந்தான். இதை வைத்து சிலர் அங்கத்துக்கு ஏதோ பிரச்சனை உள்ளது போல் சமூக ஊடங்களில் பேச சஞ்சனா கடுப்பானார். என் மகனை பற்றி ஒன்றுமே தெரியாமல், இதுபோல பேசுவது வருத்தம் அளிப்பதாக சஞ்சனா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
Similar News
News October 22, 2025
மழை பாதிப்பு: டெல்டாவுக்கு விரையும் இபிஎஸ்

தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பாதிப்புகளைப் பார்வையிட இன்று(அக்.22) EPS நேரில் செல்கிறார். தஞ்சாவூர் அம்மாபேட்டை புத்தூர், நல்ல வன்னியன் குடிகாடு, காட்டூர் மற்றும் திருவாரூரில் மன்னார்குடி, நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல்மணிகள் நீரில் மூழ்கியுள்ளது. இதனால், விவசாயிகளுக்கு நேரில் ஆறுதல் கூற உள்ளார்.
News October 22, 2025
மீண்டும் மீண்டுமா? டிரம்ப் சர்ச்சை – மோடி மெளனம்

இந்தியா மீது வரி விதிப்பு, போர் நிறுத்தம், ரஷ்ய எண்ணெய் குறித்து சர்ச்சை கருத்து, இந்தியா மறுப்பு, மோடி என் நண்பர்… ரிப்பீட்டு… அண்மை காலமாக டிரம்பின் வாடிக்கையாகவே மாறிவிட்டது இது. ஆனால் இது குறித்து தற்போது வரை PM மோடி மெளனம் கலைக்கவில்லை. உண்மையில் இருநாட்டு உறவுகளின் நிலை என்ன? PM மோடி மற்றும் அதிபர் டிரம்ப் இடையே என்னதான் நடக்கிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது. உங்கள் கருத்து என்ன?
News October 22, 2025
இஸ்லாமியர்களும் குழந்தையை தத்தெடுக்கலாம்: மதுரை HC

இஸ்லாமியர்கள் குழந்தை தத்தெடுப்பதை இஸ்லாம் மதம் அனுமதிக்கவில்லை என்று, தத்தெடுப்பு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த மதுரை HC, இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் குழந்தைகளை தத்தெடுக்கலாம். இந்த சட்டத்தில், 2015-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி, இஸ்லாம், கிறிஸ்தவம் மதத்தில் இருந்தாலும், விருப்பமுள்ளோர் குழந்தைகளை தத்தெடுக்கலாம்.