News April 28, 2025

புதுச்சேரி: குடிபோதையில் ரகளை-வாலிபர் கைது

image

வில்லியனூர் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது வில்லியனூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் மதுபானக்கடை அருகே குடிபோதையில் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்ட ஒருவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Similar News

News August 25, 2025

வேளாண் சுயதொழில் தொடங்க வாய்ப்பு

image

புதுச்சேரி அரசு வேளாண் & விவசாயிகள் நலத்துறையின் கீழ் தட்டாஞ்சாவடியில் இயங்கும் கூடுதல் வேளாண் இயக்குனர் அலுவலகம் சார்பில், வேலையில்லா விவசாய பட்டதாரிகள் மற்றும் விவசாய சான்றிதழ் பயிற்சி முடித்தவர்கள், வேளாண் சுயதொழில் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை நிலையம் துவங்க, விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த பகுதியில் உள்ள உழவர் உதவியக வேளாண் அலுவலரிடம் அதற்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.

News August 25, 2025

புதுச்சேரி: காவல்துறையில் வேலைவாய்ப்பு

image

புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள 70 உதவி காவல் ஆய்வாளர் (Sub-Inspector) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வருகிற செப்டம்பர் 12ம் தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து இதற்கு விண்ணப்பிக்கலாம். வேலை தேடுபவர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!

News August 25, 2025

புதுவை: விநாயகர் சிலை குறித்து கட்டுபாடுகள் விதிப்பு

image

விநாயகர் சிலை செய்பவர்கள் நகராட்சியிடம் அனுமதி பெற்று மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதலின்படி சுற்றுச் சூழலுக்கு ஏற்ற இயற்கையான மூலப்பொருட்களை பயன்படுத்தி சிலை உற்பத்தி செய்ய வேண்டும் என புதுவை உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் தெரிவித்துள்ளார். மேலும், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து விழா நடத்த நகராட்சி, காவல் துறையிடம் அனுமதி பெறுமாறு கூறியுள்ளார்.

error: Content is protected !!