News April 28, 2025
Myv3இல் பணத்தை முதலீடு செய்து ஏமாந்தவரா நீங்கள்?

விளம்பரம் பார்த்தால் பணத்தை அள்ளலாம் என கூறி Myv3 ads நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் திரும்பக் கிடைக்காமல் ஏமாந்தவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பொருளாதர குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். பணம் முதலீடு செய்ததற்கான அசல்ஆவணங்கள் உள்ளிட்டவற்றுடன் நேரில் வந்துபுகார் அளிக்க வேண்டும். யாராவது ஏமாந்திருந்தால் SHARE பண்ணுங்க.
Similar News
News August 22, 2025
கோவை மக்களே உஷார்… இந்த நாட்களில் மழை பெய்யுமாம்.!

கோவையில் இன்று முதல் ஆகஸ்ட் 24 வரை வானம் மேகமூட்டமாக இருக்கும். அடுத்த ஐந்து நாட்களுக்கு லேசான தூறல் மழை ஏற்படும். அதிகபட்ச வெப்பம் 31-32°C, குறைந்தபட்சம் 22-23°C. காலை ஈரப்பதம் 80-90%, மாலை 50-60%. காற்று மணிக்கு 10-18 கி.மீ வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 22, 2025
கோவையில் செப்டம்பா் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம்

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்)செப்டம்பா் 13ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், ஏற்கெனவே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், சமரசம் செய்யக்கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடா்பான வழக்குகள், வங்கிக் கடன், கல்விக் கடன் தொடா்பான வழக்குகளுக்கு சமரச தீா்வு காணப்படும் .
News August 22, 2025
கோவை: 10வது படித்தால் போதும் POLICE வேலை!

கோவை மக்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <