News April 28, 2025
சேலத்தில் பிரம்மாண்ட பத்ரகாளி சிலை பிரதிஷ்டை!

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே ஊமகவுண்டன்பட்டி பகுதியில் அருள்மிகு எல்லை பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் 12 டன் எடை கொண்ட ஒரே கல்லால் வடிவமைக்கப்பட்ட பத்ரகாளி சிலை; எட்டு கைகளுடன் சாந்த சுரூபமாக காட்சியளிக்கும் 16 அடி பிரம்மாண்ட சிலை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Similar News
News April 28, 2025
சேலத்தில் பிரம்மாண்ட சிலை பிரதிஷ்டை!

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே ஊமகவுண்டன்பட்டி பகுதியில் அருள்மிகு எல்லை பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் நேற்று 12 டன் எடை கொண்ட, ஒரே கல்லால் வடிவமைக்கப்பட்ட, 8 கைகளுடன் சாந்த சுரூபமாக காட்சியளிக்கும் 16 அடி பிரம்மாண்ட பத்ரகாளி சிலை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
News April 28, 2025
சேலம் வழியாக மதுரைக்கு சிறப்பு ரயில்

கோடைக்கால விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக வரும் ஏப்ரல் 30- ஆம் தேதி பெங்களூருவில் இருந்து மதுரைக்கும், மறுமார்க்கத்தில், மே 01- ஆம் தேதி மதுரையில் இருந்து பெங்களூருவுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்கள், கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.
News April 28, 2025
வாட்ஸ்அப் யூஸ் பண்றீங்களா? சேலம் போலீஸ் எச்சரிக்கை!

சேலம் மக்களே உஷார்! மோசடி கும்பல் உங்கள் வாட்ஸ்அப் OTP-ஐ கேட்டு, கணக்கை ஹேக் செய்ய முயற்சி செய்கிறார்கள். OTP-ஐ யாருடனும் பகிராதீர்கள். அவர்கள் OTP-ஐ பெற்றால், உங்கள் தனிப்பட்ட மற்றும் வங்கி சார்ந்த தகவல்களை வைத்து உங்களை மிரட்டவோ அல்லது பணத்தை திருடவோ வாய்ப்புள்ளது. உங்கள் வாட்ஸ்அப்பில் Two Step Verification-ஐ Enable செய்து பாதுகாப்பாக இருங்கள் என சேலம் போலீசார் தெரிவித்துள்ளனர்.