News April 28, 2025
16 பாகிஸ்தான் யூ-டியூப் சேனல்களுக்கு இந்தியா தடை

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் 16 யூ-டியூப் சேனல்களுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை முன்வைத்து, டான் நியூஸ், சாம்னா நியூஸ், ஜியோ நியூஸ், அக்தர் யூ-டியூப் உள்ளிட்ட யூ-டியூப் சேனல்கள், இந்தியா, இந்திய ராணுவம்- பாதுகாப்புப் படைகள் குறித்து தவறான தகவலை பரப்பியதாக புகார்கள் வந்தன. இதையடுத்து அந்த சேனல்களுக்கு இந்தியாவில் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
Similar News
News August 25, 2025
SPACE: நிலா யாருக்கு சொந்தம்? அங்க இடம் வாங்கமுடியுமா?

அனைவரும் பார்த்து ரசிக்கும் நிலவில், சிலர் நிலம் வாங்கி போட்டுள்ளதாக கூறுகின்றனர். ஆனால் இது சாத்தியமில்லை என 1967-ல் ஐநாவின் The Outer Space Treaty ஒப்பந்தம் சொல்கிறது. விண்வெளியில் உள்ள நிலா, கோள்கள், இவ்வளவு ஏன் ஒரு விண்கல்லை கூட எந்த நாடும் சொந்தம் கொண்டாட முடியாது, அங்கு அணு ஆயுத சோதனைகளை நடத்தக்கூடாது என்பதை தெளிவுபடுத்தவே இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. SHARE.
News August 25, 2025
BREAKING: திமுக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி நீக்கம்?

திமுக கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சி(MMK) உள்ளிட்ட <<17514578>>6 கட்சிகளுக்கு<<>> ஏன் தங்கள் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கூடாது என கேள்வி எழுப்பி ECI நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2019-ம் ஆண்டு முதல் 6 ஆண்டுகளாக எந்த தேர்தல்களிலும் வேட்பாளர்களை நிறுத்தாததால் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாளை சென்னையில் மாநில தலைமை தேர்தல் அலுவலகத்தில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
News August 25, 2025
தமிழகத்தில் 6 கட்சிகளுக்கு புதிய சிக்கல்!

2019 முதல் 6 ஆண்டுகளாக எந்த தேர்தலிலும் போட்டியிடாத தங்கள் கட்சியின் பதிவை ஏன் ரத்து செய்யக்கூடாது என 6 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. *கோகுல மக்கள் கட்சி, *இந்தியன் லவ்வர்ஸ் பார்டி, *இந்தியன் மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், *மக்கள் தேசிய கட்சி, *மனிதநேய மக்கள் கட்சி, *பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை நாளை சென்னையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது.