News April 28, 2025

இவர் தான் பல்துறை அமைச்சரோ!

image

திமுக ஆட்சி வந்தவுடன், போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பேற்ற ராஜகண்ணப்பன், 2022-ல் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டு, பின் கூடுதலாக காதி துறையும் ஒதுக்கப்பட்டது. 2023-ல் பொன்முடிக்கு நெருக்கடி ஏற்பட்டபோது, உயர்கல்வி துறை ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டது. 2024-ல் பால்வளத்துறைக்கு மாற்றப்பட்ட அவருக்கு, தற்போதைய அமைச்சரவை மாற்றத்தில் வனம், காதி துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Similar News

News April 29, 2025

அமெரிக்கா யார் பக்கம்? நிபுணர்கள் கணிப்பு

image

இந்தியா-பாக். இடையே போர் மூண்டால், USA இந்தியாவுக்கு ஆதரவாக நிற்குமென ராஜீய நிபுணர்கள் கணித்துள்ளனர். 1971 இந்தியா-பாக். போரின் போது USA, பாக்.-க்கு ஆதரவளித்தது. இந்நிலையில், இந்தியா குவாட் அமைப்பில் இருப்பதாலும், சீனா-பாக். இடையே நல்லுறவு நீடிப்பதாலும், USA இந்தியாவை பகைக்காது என்கின்றனர். அதேசமயம் தெற்காசியாவில் இந்தியா வலிமையடைவதை USA விரும்பாது என்றும் இன்னொரு தரப்பினர் கூறுகின்றனர்.

News April 29, 2025

PM கிஷான் 20-வது தவணை ஜூன் மாதம் வழங்க முடிவு!

image

மத்திய அரசின் ‘PM கிஷான்’ உதவித்தொகையின் 20-வது தவணை ஜூன் மாதம் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 9.8 கோடி விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். 19-வது தவணை ₹2000 கடந்த பிப்.24-ம் தேதி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வழங்கப்பட்ட நிலையில், 20-வது தவணையை ஜூன் மாதம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. 18-வது தவணை அக்டோபரிலும், 17-வது தவணை ஜூன் 2024லும் வழங்கப்பட்டது.

News April 29, 2025

PM மோடியை சந்தித்த நயினார் நாகேந்திரன்

image

டெல்லியில் PM மோடியை TN பாஜக தலைவராகப் பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேசினார். தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் இந்த முதல் சந்திப்பின்போது, தமிழக அரசியல் சூழல், கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மோடியிடம் எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது. முன்னதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் நயினார் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

error: Content is protected !!