News April 28, 2025
கோடை விடுமுறையில் ஆதார் புதுப்பிப்பு: பள்ளிக்கல்வித்துறை

கோடை விடுமுறை காலத்தில் ஆதாரை புதுப்பிக்க மாணவர்களை வலியுறுத்த வேண்டுமென்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதாெடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் அருகிலுள்ள இ-சேவை மையங்கள், அஞ்சலகங்கள், வட்டார வள அலுவலகங்களில் மாணவர்களின் ஆதாரை புதுப்பிக்க தலைமை ஆசிரியர்கள் மூலம் பெற்றோரிடம் வலியுறுத்த கேட்டுள்ளது.
Similar News
News January 11, 2026
பள்ளி மாணவிக்கு குழந்தை.. 15 பேர் சிக்கினர்

திருச்சியில் 6 ஆண்டுகளாக உறவினர்களால் 16 வயது சிறுமி சீரழிக்கப்பட்டுள்ளார். முதல்முதலாக 2021-ல் 6-ம் வகுப்பு படிக்கும்போது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். அதன்பின் தாத்தா, தாய்மாமா, அத்தை மகன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் வன்கொடுமை செய்துள்ளனர். சிறுமி குழந்தை பெற்றெடுத்த நிலையில், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உத்தரவுப்படி, 15 பேர் மீது போக்சோ வழக்கு பாய்ந்துள்ளது.
News January 11, 2026
யாருக்கு ‘25’ மாஸாக அமைந்தது?

சிவகார்த்திகேயனின் 25-வது படமாக ‘பராசக்தி’ ரிலீஸாகியுள்ளது. ஒவ்வொரு நடிகருக்கும் தங்களது 25, 50, 75, 100-வது படங்கள் கரியரில் மைல்கல்லாக இருக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். சிலருக்கு அது பாறையாக இறுகும், சிலருக்கு மெழுகாக உருகும். அப்படி முன்னணி தமிழ் நடிகர்களின் 25-வது படங்களை மேலே swipe செய்து பாருங்க. உங்களுக்கு பிடித்த படம் எது? யாருக்கு சரியாக அமைந்தது என்று கமெண்ட் பண்ணுங்க.
News January 11, 2026
குழந்தைகளை காய்கறிகளை சாப்பிடவைக்க டிரிக்ஸ்

தற்போதுள்ள குழந்தைகள் காய்கறிகளை சாப்பிட மறுக்கின்றனர். இதனால் அவர்களுக்கு நார்ச்சத்து கிடைக்காமல், நோய்வாய்ப்படுகின்றனர். அவர்களை சாப்பிடவைக்க சில டிரிக்ஸ் இருக்கு. ➤காய்கறிகளை அரைத்து சாப்பாட்டில் சேர்க்கலாம் ➤பிடித்த பழங்களை கொடுங்கள் ➤காய்களை பொம்மைகள் போல கிரியேட்டிவ்வாக வெட்டி சமைத்து கொடுக்கலாம் ➤சாப்பாட்டிலிருந்து எடுக்கமுடியாத அளவுக்கு பொடி பொடியாக காய்களை வெட்டி உணவில் சேருங்கள். SHARE.


