News April 28, 2025
புதுச்சேரி: மின்தடை புகார்களுக்கான எண்

புதுச்சேரியில் ஏற்படும் மின்தடை புகார்களுக்கு கட்டணமில்லா தொலைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி உள்ளது. அதன்படி, சூப்பரண்டிங்க் என்ஜினியர் மற்றும் துறைத் தலைவர் மின்னஞ்சல் முகவரி : se1ped.pon@nic.in மற்றும் தொலைப்பேசி எண்: 0413-2334277. இந்த தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க…
Similar News
News April 28, 2025
பாண்டிச்சேரியில் பாகிஸ்தான் பெண்

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா பல நடவடிக்களை எடுத்து வருகிறது. இந்நிலையில் புதுவையில் லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஹனீப்கான்(39) கடந்த 2013-ம் ஆண்டு அவரின் உறவினரான பாகிஸ்தானைச் சேர்ந்த பஷியாபானு (38) என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் பஷியா பானு விசா கெடு முடிவடைந்த நிலையில் அவர் நாட்டை விட்டு செல்லாமல் இருப்பதால் அவர் மீது லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News April 28, 2025
புதுவை வெண்கட்டா நகர் பகுயிதியில் மின் தடை அறிவிப்பு

புதுவை வெங்கட்டா நகர் மின் நிலையத்தில் நாளை (29-4-25) பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் 1 மணி வரை ரெயின்போ நகர், செல்லான் நகர், ராஜராஜேஸ்வரி நகர் , திருவள்ளுவர் நகர், பெருமாள் கோவில் வீதி, தியாகராஜா வீதி, அண்ணா சாலை, கருவூலசாலை, காந்தி வீதி, பாரதி வீதி, ஜமீன்தார் கார்டன்மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை என மின்துறை அறிவித்துள்ளது.
News April 28, 2025
புதுச்சேரி: குடிபோதையில் ரகளை-வாலிபர் கைது

வில்லியனூர் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது வில்லியனூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் மதுபானக்கடை அருகே குடிபோதையில் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்ட ஒருவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.