News April 28, 2025
வீட்டின் பூட்டை உடைத்து 22 சவரன் நகை திருட்டு

மறைமலை நகரைச் சேர்ந்தவர் வெங்கட்ரமணா (60). விவசாயியான இவர் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன் மற்றும் பின் கதவை பூட்டி விட்டு தூங்க சென்றார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 22 சவரன் நகைகள் திருடுபோனது தெரிய வந்தது. புகாரின் பேரில் மறைமலைநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 28, 2025
செங்கல்பட்டு மக்களே! இலவச தையல் மிஷின் வேண்டுமா?

தமிழக அரசு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக தையல் இயந்திரம் வழங்கி வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க எந்த ஒரு கல்வி தகுதியும் தேவை இல்லை. விருப்பமுள்ளவர்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். செங்கல்பட்டு மக்களே இதனை SHARE பண்ணுங்க
News September 28, 2025
செங்கல்பட்டு மக்களே பெட்ரோல் தரமாக இல்லையா??

செங்கல்பட்டு மக்களே உங்கள் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் நீங்கள் வாகனங்களில் போடும் பெட்ரோல் தரமானதாக இல்லையா? இதனால் உங்க வாகனங்களின் மைலேஜ் பாதிக்கப்படலாம். உங்கள் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகள் போடும் பெட்ரோல் தரமாக இல்லாமல் இருந்தா புகார் அளித்து தெரியபடுத்துங்க.. இந்தியன் ஆயில் – 18002333555 ஷேர் பண்ணுங்க.
News September 28, 2025
செங்கல்பட்டு: செல் போன் தொலைந்தால் இதை பண்ணுங்க!

செங்கல்பட்டு மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <