News April 28, 2025
கோடை லீவுல செல்போன், ஐபிஎல்? ஜாக்கிரதை மக்களே!

நீலகிரி: கோடை விடுமுறையில் பள்ளி மாணவர்கள் செல்போனிலும், இரவில் ஐபிஎல் கிரிக்கெட்டிலும் மூழ்கி உள்ளனர். இதனால் பார்வை குறைபாடு, ஞாபக மறதி, கவனச்சிதறல், படிப்பு மந்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை பெற்றோர்கள் கண்காணித்து பாரம்பரிய விளையாட்டுகளை கற்றுக்கொடுக்க வேண்டும் என நீலகிரியை சேர்ந்த கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
Similar News
News October 19, 2025
நீலகிரி: டிகிரி போதும்.. POST OFFICE-ல் வேலை ரெடி!

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் இந்திய முழுவதும் காலியாக உள்ள 348 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த 18 வயது முதல் 30 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இந்த <
News October 19, 2025
நீலகிரியில் பெய்த மழை அளவு விபரம்!

நீலகிரி மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை எதிரொலியாக, குன்னுார் சுற்றுப்புற பகுதிகளில் மூன்று நாட்களாக இரவில் கனமழை பெய்து வருகிறது. நீலகிரியில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டர் அளவில் பின்வருமாறு: ஊட்டி123, குந்தா 49, கெத்தை 56, கிண்ணகோரை 41, பாலகோலா 39, குன்னூர் 95, பார்லியார் 93, எடப்பள்ளி 113, கோத்தகிரி 52, கோடநாடு 56, பந்தலூர் 74, கூடலூர் 6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
News October 19, 2025
நீலகிரி மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் தீபாவளி வாழ்த்து!

நீலகிரி மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்தி குறிப்பில்; பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும். மேலும் அனைத்து மக்களுக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.