News April 28, 2025

நாமக்கல் சத்துணவு மையத்தில் உதவியாளர் வேலை

image

நாமக்கல் மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 321 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். சம்பளமாக ரூ.3000- 9000 வழங்கப்படும். விண்ணபிக்க <>இங்கே கிளிக்<<>> செய்யவும். விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ், 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ரேஷன் கார்டு, இருப்பிடச் சான்று, ஆதார் அட்டை, சாதிச்சான்று ஆகியவற்றின் நகல் இணைக்கப்பட வேண்டும்.

Similar News

News September 10, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 10) இரவு நேர ரோந்து பணிகளுக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர காலங்களில் பொதுமக்கள் தங்களது உட்கோட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் 100 என்ற எண்ணையும் அழைக்கலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

News September 10, 2025

நாமக்கல் இரயில் பயணிகளுக்கு அறிவிப்பு!

image

நாமக்கலில் இருந்து நாளை (செப்.11) நள்ளிரவு 1:20 மணிக்கு காட்பாடி, அரக்கோணம், சென்னை பெரம்பூர், நெல்லூர், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, ராஜமுந்திரி, விசாகப்பட்டினம்(துவ்வாடா), புவனேஸ்வர், கரக்பூர், கல்கத்தா(அண்டோல்), துர்காபூர், அசன்சோல், ஜசிதிஹ், பரூனி போன்ற பகுதிகளுக்கு செல்ல 06059 மதுரை – பரவ்னி AC ரயிலில் டிக்கெட்டுகள் உள்ளது.

News September 10, 2025

நாமக்கல்: நாய்களுக்கு உரிமம் பெறாமல் இருந்தால் அபராதம்!

image

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாய்களை வளர்ப்பவர்கள், அதற்கான உரிமத்தை மாநகராட்சியில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என ஆணையாளர் சிவகுமார் தெரிவித்துள்ளார். வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றிதழையும் இணைத்து, உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். உரிமம் பெறாமல், நாய்களை தெருவில் திரியவிடும் உரிமையாளர்களுக்கு ரூ.25,000 முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!