News April 28, 2025
சர்க்கரையை விரும்பி சாப்பிடுவீங்களா..?

டீ, காபியில் கொஞ்சம் சர்க்கரை தூக்கலாக போட்டு குடிப்பீங்களா? அதிகப்படியான சர்க்கரை நுகர்வு ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. எடை அதிகரிப்பதில் சர்க்கரைதான் முக்கிய காரணம். இவை, இதயத்தை தான் கடுமையாக பாதிக்கும். புற்றுநோய், மனச்சோர்வு, கல்லீரல் கொழுப்பு போன்றவற்றையும் வரலாம். மேலும், சிந்திக்கும் திறனையும் இது பாதிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
Similar News
News April 29, 2025
மத்தியஸ்தத்திற்கு வந்துள்ள இஸ்லாமிய நாடுகள்

இந்தியா-பாக். இடையே மத்தியஸ்தம் செய்வதற்கு இஸ்லாமிய நாடுகள் முன்வந்துள்ளன. பஹல்காம் தாக்குதலை அடுத்து, சிந்து நதிநீர் நிறுத்தம், பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் என இந்தியா உக்கிரமாக உள்ளது. இந்நிலையில், சவுதி வெளியுறவுத்துறை அமைச்சர் ஃபைசல் பின் ஃபர்ஹான் அல், இந்தியா-பாக். வெளியுறவுத்துறை அமைச்சர்களிடம் பேசியுள்ளார். சமாதானப் பேச்சுவார்த்தையை ஒருங்கிணைக்க தயார் என ஈரானும் முன்வந்துள்ளது.
News April 29, 2025
மே தினத்தன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

மே 1 தொழிலாளர்கள் தினத்தன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் ஹோட்டல்களில் மது விற்பனை இருக்காது. அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் இதுகுறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
News April 29, 2025
6.6 லட்சம் செலவழித்து.. பூனையாக மாற நினைத்து…

பிளாஸ்டிக் சர்ஜரி மோகம் அதிகரித்து வருகிறது. அதிலும் விசித்திர தோற்றத்திற்கு மாற சிலர் ஆசைப்படுகின்றனர். ஆஸ்திரேலியாவின் ஜோலீன் டாசன்(29) தன்னை ஒரு பூனையை போல மாற்றிக்கொள்ள ஆசைப்பட்ட, சுமார் 6.6 லட்சம் செலவும் செய்துள்ளார். அவரது மூக்கு, தாடையின் வடிவங்கள் மாற்றப்பட்ட நிலையில், ஏனோ அம்மணிக்கு ஆசைப்பட்டது ரிசல்ட் கிடைக்கவில்லை. இப்போது பழைய உருவத்திற்கும் மாற முடியாமல் தவிக்கிறார். என்னத்த சொல்ல!