News April 28, 2025
அமைச்சர்களின் ராஜினாமா ஏற்பு

செந்தில் பாலாஜி, பொன்முடியின் ராஜினாமா கடிதங்கள் ஏற்கப்பட்டுள்ளன. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் SC காட்டிய கெடுபிடியால் செந்தில் பாலாஜியும், சைவம், வைணவம் குறித்த பேச்சு சர்ச்சையானதால் பொன்முடியும் அமைச்சர் பதவியை இழக்க நேரிட்டது. இருவரின் ராஜினாமா கடிதங்களையும் ஆளுநர் ஏற்றுக் கொண்டுள்ளார். அதேநேரத்தில், மீண்டும் அமைச்சராக மனோ தங்கராஜ் இன்று பதவி பிரமாணம் செய்துகொள்ள உள்ளார்.
Similar News
News April 29, 2025
தங்க பத்திர திட்ட முதலீடு: RBI புதிய அறிவிப்பு!

2020 – 21-ம் நிதியாண்டில் தங்க பத்திர திட்டத்தில் (SGB) முதலீடு செய்தவர்கள் முன்கூட்டியே அவற்றை திரும்பப் பெறலாம் என RBI அறிவித்துள்ளது. இவ்வாறு விற்பனை செய்பவர்களுக்கு 1 யூனிட் (அ) 1 கிராம் தங்கத்திற்கு ₹9,600 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக தங்க பத்திரங்கள் 8 ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்டவை. ஆனால் 5 ஆண்டுகள் முடிந்த உடனே அதனை விற்று பணமாக்கும் வாய்ப்பை RBI தற்போது அறிவித்துள்ளது.
News April 29, 2025
வெற்றியை தொடருமா இந்திய மகளிர் படை?

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று SA மகளிர் அணியை IND மகளிர் அணி எதிர்கொள்கிறது. SL-க்கு எதிரான கடந்த போட்டியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இன்றைய போட்டியிலும் அதை தொடரும் முனைப்பில் இந்திய மகளிர் படை உள்ளது. காலை 10 மணிக்கு இப்போட்டி தொடங்க உள்ளது. முன்னதாக, SA மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 3-0 என்ற நிலையில் இந்தியா ஒயிட்வாஷ் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
News April 29, 2025
அட்சய திருதியை நாளில் 5 பொருள்களை வாங்குங்கள்

அட்சய திருதியை நாளை (ஏப்.29) மாலை 5:31-க்கு தொடங்கி ஏப்.30-ம் தேதி பிற்பகல் 2:12-க்கு நிறைவடையும். இந்த நாளில் தானம் செய்வது, பொருள் வாங்குவது, வழிபாடு உள்ளிட்ட செயல்களை மேற்கொள்வது நற்பலன்கள் தரும் என்பது நம்பிக்கை. தங்கம் வாங்குவது மங்களகரமான தொடக்கமாக கருதப்பட்டாலும், நவதானியங்கள், மண்குடம், பித்தளை-செம்பு பாத்திரங்கள், மஞ்சள், புத்தகங்கள், உப்பு போன்றவற்றையும் வாங்கலாம் எனக் கூறப்படுகிறது.