News April 28, 2025
குருபர அள்ளி கிணற்றில் விழுந்த முதியவர்

மொரப்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குருபர அள்ளி பகுதியை சேர்ந்தவர் மந்திரி(55). உணவு சாப்பிட்டு கைகழுவ சென்றபோது இவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். அரூர் தீயனைப்பு துறையினர், இவரது உடலை மீட்டு அரூர் G.H. க்கு அனுப்பி வைத்தனர். இவரது இறப்பு குறித்து மொரப்பூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News December 21, 2025
தருமபுரி: குடும்ப பிரச்சனையால் விபரீத முடிவு!

தொப்பூர் அருகே உள்ள பப்பிரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் அருண் (40), குடும்பப் பிரச்சினை காரணமாக வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மயங்கிக் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.
News December 21, 2025
தருமபுரி: அரசு பேருந்து ஏறி உடல் துண்டாகி பலி!

தருமபுரியில் இருந்து அரூர் செல்லும் 2 பேருந்துகள், நேற்று காலை (டிச.20) வெளியே வரும்போது நான்கு சக்கர வாகனம் இடது புறமாக நின்று கொண்டு இருந்தது. இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த ஜெயபிரகாஷ் (55), சாலையில் செல்லும் பொழுது பிக்கப் வாகனம் கதவு திடீரென திறந்தது. அப்போது நிலை தடுமாறிய அவர் பேருந்து முன் விழுந்தார். இதில் பேருந்து அவர் மேல் ஏறி, உடல் இரண்டாக பிரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
News December 21, 2025
தருமபுரி: சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு தேர்வு!

தருமபுரியில் தமிழகக் காவல்துறையில் காலியாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு டிசம்பர்-21 (ஞாயிற்றுக்கிழமை) தேர்வு இரண்டு கட்டங்களாக, காலை அமர்வு முதன்மையான தேர்வு காலை 10:00 மணி முதல் 12:30 மணி வரையும், குறிப்பாக தேர்வர்கள் காலை 8:00 மணிக்கே மையத்திற்கு வர வேண்டும். அதேபோல பிற்பகல் அமர்வு தமிழ் தகுதித் தேர்வு மாலை 3:30 மணி முதல் 5:10 மணி வரை நடைபெற உள்ளது.


