News April 28, 2025
ஜல்லிக்கட்டு செல்ல மனைவி எதிர்ப்பு: வாலிபர் தற்கொலை

மதுரை கூடல்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன் (26). பெயிண்டராக வேலை பார்த்து வந்த இவர், கோமதிபுரத்தை சேர்ந்த அட்சயா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், ஹரிஹரன் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு சென்று வந்தார். ஆனால், அவரது மனைவிக்கு இது பிடிக்கவில்லை. இதனால், கோபித்து கொண்டு அட்சயா, தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் ஹரிஹரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Similar News
News August 12, 2025
BREAKING: தவெக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி

மதுரையில் நடைபெறும் தவெக 2 ஆவது மாநில மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளதாக, தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார். காவல்துறை சார்பாக எழுப்பப்பட்ட 42 கேள்விகளுக்கு பதில் அளித்த நிலையில், மாநாட்டிற்கு காவல்துறை சார்பில், பாதுகாப்பு அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்திருப்பதாக ஆனந்த் அறிவித்துள்ளார்.
News August 11, 2025

மதுரை பெண்களே டவுன்லோடு பண்ணிக்கோங்க..!

தமிழக காவல்துறை சார்பில் காவல் உதவி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் பொது இடங்களில் ஏதேனும் சிக்கலில் மாட்டிக்கொண்டாலோ அல்லது அவசர காலங்களில் செயலியில் உள்ள சிவப்பு நிற பொத்தானை அழுத்தினால், உங்கள் விவரம், இருப்பிடம் ஆகியவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று விடும். இதன் மூலம் துரிதமாக உதவி கிடைக்கும்.<<-1>> இங்க கிளிக் <<>>பண்ணி செயலியை டவுன்லோடு பண்ணிக்கோங்க. இந்த தகவலை SHARE பண்ணுங்க.