News April 28, 2025
மருத்துவ மாணவரிடம் ரூ.11 லட்சம் மோசடி

வேலூர், தனியார் மருத்துவ கல்லூரியில் 27 வயது மாணவர் முதுகலை மருத்துவம் படித்து வருகிறார். இவரது கைப்பேசி எண்ணுக்கு டெலிகிராம் செயலியில் ஆன்லைன் பகுதி நேரம் மூலம் சம்பாதிக்கலாம் என குறுஞ்செய்தி வந்துள்ளது. அவர்களின் ஆசை வார்த்தையை நம்பி பல தவணைகளாக மொத்தம் ரூ11 லட்சம் முதலீடு செய்துள்ளார். மேலும் ரூ.5 லட்சம் செலுத்த வேண்டும் என கூறிய போது ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாணவர் போலீசில் புகார் அளித்தார்.
Similar News
News October 19, 2025
வேலூர்: தரமற்ற பெட்ரோலா? இதை பண்ணுங்க!

வேலூர் மக்களே, உங்கள் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் வாகனங்களுக்கு வழங்கப்படும் பெட்ரோல் தரமானதாக இல்லையென்றால், நீங்கள் உடனடியாகப் புகார் அளிக்கலாம். இதற்காக, அனைத்து பெட்ரோல் நிறுவனங்களும் கட்டணமில்லா தொலைபேசி எண்களை அறிவித்துள்ளன.
1) இந்தியன் ஆயில்: 18002333555
2) பாரத் பெட்ரோல்: 1800224344
3) HP பெட்ரோல்: 9594723895
பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்!
News October 19, 2025
வேலூர்: தீபாவளி பண்டிகை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

வேலூர் மாவட்டத்தில் தீபாவளிக்கு காலை 6-7 மணி வரையிலும், இரவு 7- 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்கவும். மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள், அமைதி காக்கப்படும் இடங்கள், குடிசை பகுதிகள், எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
News October 19, 2025
வேலூர் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

வேலூர் மாவட்டம் ஆரியூரை சேர்ந்தவர் சித்ரா (53). இவர், சேலை வியாபாரம் செய்து வருகிறார். நேற்று அக்.18 அரியூர் பகுதியில் வியாபாரத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் பைக்கில் வந்த மர்மநபர் சித்ராவின் கழுத்தில் இருந்து ஒரு சவரன் செயினை பறித்து கொண்டு தப்பி சென்றார். இது குறித்து சித்ரா அரியூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.