News April 28, 2025
10 ஆண்டுகளாக தேடப்பட்ட குற்றவாளி கைது

நாமக்கல்: குமாரபாளையத்தில் 2012ஆம் ஆண்டு வழிப்பறி வழக்கில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டவர், திருப்பத்தூர் மாவட்டம் கோட்டான்கல்லூர், பெரம்பட்டு பகுதியைச் சேர்ந்த மாது என்கிற கொர மாது (வயது 47). இவர் 2015ஆம் ஆண்டு சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு கடந்த 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். நீதிமன்ற உத்தரவின்படி இவரை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று கோவையில் கைது செய்தனர்.
Similar News
News November 8, 2025
நாமக்கல் மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் பட்டியல் வெளியீடு!

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (08.11.2025) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் நான்கு சக்கர வாகன ரோந்துப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட இரவு ரோந்து அதிகாரியாகத் திரு. சக்திவேல் (காவல் கண்காணிப்பாளர், ஆயுதப்படை) நியமிக்கப்பட்டுள்ளார். பொதுமக்கள் அவசர உதவிக்கு 100 அல்லது மாவட்டக் கட்டுப்பாட்டு அறை எண்ணான 94981 81216-ஐத் தொடர்பு கொள்ளலாம்.
News November 8, 2025
நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் இன்று நவம்பர் 8ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் குழு கூட்டத்தில் முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு, ரூ.5.65 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று முட்டையின் விலை ரூ.5.60 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை தேவை அதிகரித்ததன் காரணமாகவே விலை உயர்ந்ததாக கூறப்படுகிறது.
News November 8, 2025
நாமக்கல்லில் அதிரடி 54 பேர் லைசென்ஸ் தடை

நாமக்கல் மாவட்டத்தில் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், பிரபாகரன் ஆகியோர் இணைந்து மாதாந்திர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் 840 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு, 242 வாகனங்களுக்கு அறிக்கைகள் வழங்கப்பட்டன. ஆறு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 54 பேரின் லைசென்ஸ் தடைசெய்யப்பட்டது. மேலும் ₹7,86,500 அபராதம் விதிக்கப்பட்டு ₹62,300 வசூலிக்கப்படது.


