News April 28, 2025
ஏப்ரல் 28: வரலாற்றில் இன்று

*1876 – பிரிட்டன் இந்தியாவின் அரசியாக விக்டோரியா மகாராணி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. *1925 – நீதிக்கட்சி நிறுவனர் சர் பிட்டி தியாகராயர் இறந்தநாள். *2000 – இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான விடுதலைப் புலிகளின் தொடர் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தது. *1987 – நடிகை சமந்தா பிறந்தநாள். *உலக தொழிலாளர் நினைவு நாள்.
Similar News
News December 1, 2025
நெல்லை: கால்வாயில் ஆண் சடலம் மீட்பு

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் எல்கைக்கு உட்பட்ட சிவந்திபுரம் பகுதியில் நதியுன்னி கால்வாயில் அணைக்கட்டு பகுதியில் நேற்று அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று அம்பாசமுத்திரம் தீயணைப்பு துறையினர் மூலம் மீட்கப்பட்டு அம்பாசமுத்திரம் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 1, 2025
ஹீரோ ரோல் போர் அடித்து விட்டது: மம்முட்டி

பல டாப் ஹீரோக்கள் எத்தனை வயதானாலும் சரி, ஹீரோவாகவே நடிப்பர். ஆனால் மம்முட்டி சமீபமாக வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து அசத்தி வருகிறார். ‘களம் காவல்’ படத்தில் வில்லனாக நடிக்கும் அவர், ‘ஹீரோவாக நடிப்பதில் உற்சாகமில்லை, சீனியர், வில்லன் பாத்திரங்களில் தான் நடிப்பு திறமையை காட்ட அதிக வாய்ப்புகள் உள்ளன’ என்று தெரிவித்துள்ளார். ஸ்டார் இமேஜை விட நடிகராக இருப்பதே பிடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
News December 1, 2025
BREAKING: 10 மாவட்ட பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு

டிட்வா புயல் எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழை தொடரும். எனவே, பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் குடை, ரெயின் கோட் போன்றவற்றை எடுத்துச் செல்லவும்.


