News April 28, 2025
உங்களை avoid செய்கிறாரா? இதோ அறிகுறிகள்

உங்கள் கணவனோ, மனைவியோ உங்களை கட்டுப்படுத்த (அ) தவிர்க்க நினைக்கிறார் என்பதை இந்த அறிகுறிகளால் அறியலாம்: *குடும்பத்தினர், உறவினர்கள் & நண்பர்களிடமிருந்து உங்களை தனிமைப்படுத்துவது *சின்ன விஷயங்களுக்கு கூட உங்களையே குறைகூறுவது *தன் தவறை ஒப்புக்கொள்ளாமல் உங்களையே காரணமாக்குவது *குடும்பம், குழந்தைகள், வசதி இவற்றை காட்டி உளவியல் ரீதியாக அச்சுறுத்துவது *உங்கள் சாதனைகளை அங்கீகரிக்காதது. வேறு ஏதாவது?
Similar News
News April 29, 2025
மே தினத்தன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

மே 1 தொழிலாளர்கள் தினத்தன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் ஹோட்டல்களில் மது விற்பனை இருக்காது. அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் இதுகுறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
News April 29, 2025
6.6 லட்சம் செலவழித்து.. பூனையாக மாற நினைத்து…

பிளாஸ்டிக் சர்ஜரி மோகம் அதிகரித்து வருகிறது. அதிலும் விசித்திர தோற்றத்திற்கு மாற சிலர் ஆசைப்படுகின்றனர். ஆஸ்திரேலியாவின் ஜோலீன் டாசன்(29) தன்னை ஒரு பூனையை போல மாற்றிக்கொள்ள ஆசைப்பட்ட, சுமார் 6.6 லட்சம் செலவும் செய்துள்ளார். அவரது மூக்கு, தாடையின் வடிவங்கள் மாற்றப்பட்ட நிலையில், ஏனோ அம்மணிக்கு ஆசைப்பட்டது ரிசல்ட் கிடைக்கவில்லை. இப்போது பழைய உருவத்திற்கும் மாற முடியாமல் தவிக்கிறார். என்னத்த சொல்ல!
News April 29, 2025
ஆட்டம் இன்னும் முடியல! CSK பிளே-ஆஃப் போக முடியும்!

இந்த வருஷம் எல்லாமே CSK-க்கு எதிரா இருக்கு. இதுவரை, 9 மேட்சில் 2-ல் மட்டுமே ஜெயிச்சிருக்காங்க. இனி எங்க பிளே-ஆப் போறது என நம்பிக்கை இழக்க வேண்டாம். யாரோ ஒரு முரட்டு CSK ஃபேனின் கால்குலேஷன் 2-வது படத்தில் பாருங்க. மீதி இருக்கும் 5 மேட்சும் CSK ஜெயிச்சு, மத்த டீம்ஸ், இதுல இருக்குற படி மத்த டீம்களின் மேட்ச் முடிஞ்சா போதும்! CSK பிளே-ஆப் போயிடலாம். இதெல்லாம் ஓகேதான். ஆனா CSK ஜெயிக்கணுமே?