News April 28, 2025
அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு

முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பால்வளத்துறை அமைச்சருமான ஆர்.எஸ் இராஜகண்ணப்பனுக்கு நேற்று (ஏப்.27) அமைச்சர் பொன்முடி வகித்து வந்த வனத்துறை மற்றும் காதி துறையை கூடுதலாக ஒதுக்கீடு செய்து ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. இதனையடுத்து அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News November 3, 2025
ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் கைது

திருவாடனை நம்புதாளையைச் சேர்ந்த பாலமுருகன்(30), தினேஷ்(18), குணசேகரன்(42), ராமு(22) ஆகியோர் நம்புதாளை கடற்கரையிலிருந்து நேற்று (நவ.2) பைபர் படகில் மீன் பிடிக்கச் சென்றனர். இன்று (நவ.3) அதிகாலை நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கூறி 4 மீனவர்களை படகுடன் கைது செய்து காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.
News November 3, 2025
ராம்நாடு: இதை தெரிஞ்சுக்க இனி அலைய வேண்டாம்!

ராம்நாடு மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை <
News November 3, 2025
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல்

ராமேசுவரத்திலிருந்து 300 விசைப் படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு 5 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினர், மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். 10க்கும் மேற்பட்ட விசைப் படகுகளிலிருந்த வலைகளையும் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.


