News April 28, 2025
திருநங்கைகளுக்கு எந்த டாய்லெட்?

பிறப்பில் அறியப்படும் பாலினமே உண்மையான பாலினம் என்று UK நாட்டின் சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பளித்திருந்தது. இதனால், திருநங்கையர்கள் மற்றும் திருநர்கள் எந்த கழிவறையை பயன்படுத்துவது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. தாங்கள் ஆண், பெண் என இரண்டு டாய்லெட்டிலும் புறக்கணிக்கப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தீர்ப்புக்கு முன் திருநங்கையர்கள் பெண்களுக்கான டாய்லெட்டை பயன்படுத்தி வந்தனர்.
Similar News
News April 28, 2025
ஒரே ஓவரில் 28 ரன்கள்

GT அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், RR அணி வீரர்கள் ருத்ர தாண்டவம் ஆடி வருகின்றனர். முதலில் பேட்டிங் செய்த GT அணி, 209 ரன்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய RR அணி, 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 81 ரன்கள் குவித்துள்ளது. குறிப்பாக, நான்காவது ஓவரில் 6 6 4 0 6 Wd Wd 4 என 30 ரன்கள் விளாசினார் வைபவ் சூர்யவன்ஷி. இவருக்கு இணையாக ஜெய்ஸ்வாலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்.
News April 28, 2025
ஒரே நாளில் வெள்ளி விலை ₹1000 குறைவு

நீண்ட நாட்கள் கழித்து தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. குறிப்பாக, தங்கம் விலை எகிறியதால், பலர் வெள்ளியை நாடினர். குறிப்பாக இன்று ஒரு நாளில் மட்டும் வெள்ளி விலை (கிலோ) ₹1000 குறைந்தது. வரும் நாட்களிலும் தங்கம் மற்றும் வெள்ளி விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News April 28, 2025
எந்த நேரத்திலும் இந்தியா தாக்கலாம்: பாக்., அமைச்சர்

இந்தியா எந்த நேரத்திலும் தங்கள் நாட்டை தாக்கலாம் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் அச்சம் தெரிவித்துள்ளார். ஆகவே, இதை எதிர்கொள்ள தங்கள் ராணுவம் தயாராக உள்ளதாகவும், நாடு முழுவதும் உஷார் நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தேவையெனில் அணு ஆயுதங்களும் பயன்படுத்துவோம் என்றும் கூறியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பின் இருநாடுகள் இடையே உறவு முற்றிலும் சீர்குலைந்துள்ளது.