News April 28, 2025

மே.வங்க அரசியலில் பேசுபொருளாகும் மதம்

image

மம்தா பானர்ஜி ஒரு இந்து விரோதி என பாஜக தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுப்பதற்காக, மம்தா தனது இந்து அடையாளத்தை சமீபகாலமாக வெளிப்படுத்திவருகிறார்.தான் ஒரு பெருமைமிகு இந்து என்று சட்டசபையிலே அறிவித்தார். தன்னுடைய பிராமண அடையாளத்தையும் பறைசாற்றிக்கொண்டார். இதனால், சுதந்திர இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் மேற்கு வங்க அரசியல் களத்தில் மதம் பேசுபொருளாகி உள்ளது.

Similar News

News September 16, 2025

ஆரோக்கியமான கல்லீரல் வேண்டுமா?

image

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உணவு கட்டுபாடு மிகவும் அவசியம். ஆரோக்கியமான கல்லீரல் நோயற்ற வாழ்வுக்கு வழிவகுக்கிறது. எனவே, கல்லீரலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள சில உணவுகளை நாம் தவிர்ப்பது நல்லது. அது என்ன என்பதை மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அதை ஒவ்வொன்றாக swipe செய்து பாருங்க. மேலும், தவிர்க்க வேண்டியவை ஏதேனும் இருந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.

News September 16, 2025

ஆஸ்கர் வென்ற நடிகர் காலமானார்!

image

ஆஸ்கர் விருது வென்ற பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் ரெட்ஃபோர்ட்(89) காலமானார். இவர் ‘Captain America: The Winter Soldier’ படத்தில் வில்லனாக நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர். ‘ORDINARY PEOPLE’ படத்தை இயக்கிய அவருக்கு, சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. நடிகர், இயக்குநர், சுற்றுச்சூழல் ஆர்வலர் என பன்முகத் தன்மை கொண்ட ராபர்ட் மறைவுக்கு, பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP

News September 16, 2025

IND A vs AUS A: 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்ஷ் துபே

image

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸி., A அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இன்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸி., முதல் நாள் முடிவில் 73 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 337 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சாம் கோன்ஸ்டாஸ் (109), காம்பெல் கெல்லவே (88) ரன்களை குவித்தனர். கேப்டன் நதன் ஒரு ரன்னிலேயே பெவிலியன் திரும்பினார். இந்தியா தரப்பில் ஹர்ஷ் துபே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

error: Content is protected !!