News April 28, 2025
விராட் 50, க்ருனால் 50, பார்ட்னர்ஷிப் 100

DC அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் விராட் கோலி & க்ருனால் பாண்டியாவின் பார்ட்னர்ஷிப், RCB அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது. 163 என்ற இலக்கை துரத்த களமிறங்கிய RCB அணியின் படிக்கல் 0, பட்டிதார் 6, பெத்தெல் 12 என அவுட் ஆகினர். இருப்பினும் கோலி & க்ருனாலின் நிதானமான ஆட்டம் RCB-ஐ வெற்றியை நோக்கி நகர வைத்திருக்கிறது.
Similar News
News October 29, 2025
பெண் ஜிகாதிகளை உருவாக்கும் JeM

பாக்.,ஐ தளமாகக் கொண்டு செயல்படும் JeM பயங்கரவாத அமைப்பு, அதன் மகளிர் பிரிவுக்கான ஆட்சேர்ப்பை தீவிரப்படுத்தி வருகிறது. இதற்காக பயங்கரவாதிகளின் குடும்பபெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய வீராங்கணைகளுக்கு பதிலடி கொடுக்க, இந்த பெண் ஜிகாதிகள் உருவாக்கப்படுகின்றனர். JeM-ல் சேரும் பெண்கள் நேரடியாக சொர்க்கத்திற்கு செல்வர் என அதன் தலைவர் மசூத் அசார் கூறும் ஆடியோவும் வெளியாகியுள்ளது.
News October 29, 2025
ஓட்டுக்காக PM மோடி டான்ஸ் கூட ஆடுவார்: ராகுல்

ஓட்டுக்காக PM மோடி எந்த நாடகத்தையும் நடத்துவார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். பிஹார் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், வாக்குக்காக PM டான்ஸ் கூட ஆடுவார் எனவும், நிதிஷ்குமார் எனும் ரிமோட் கண்ட்ரோலை வைத்து பாஜக பிஹாரை ஆள்வதாகவும் சாடியுள்ளார். மேலும், 20 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் நிதிஷ்குமார் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்புக்கு என்ன செய்தார் என்று சொல்ல முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News October 29, 2025
சூரியன் மறைந்த பின் இந்த 5 விஷயங்களை செய்யாதீங்க!

வாஸ்து சாஸ்திரங்களின் படி, வீட்டில் துரதிர்ஷ்டம் சேருவதை தவிர்க்க, சூரியன் மறைந்த பிறகு இந்த 5 விஷயங்களை பண்ணக்கூடாது என எச்சரிக்கப்படுகிறது ✱நகம் வெட்டக்கூடாது ✱துளசி செடிக்கு நீருற்ற கூடாது ✱பூக்கள், இலைகளை பறிக்கக்கூடாது ✱பால், தயிர், உப்பு ஆகியவற்றை தானம் கொடுக்க கூடாது ✱கண்ணாடியில் அளவுக்கு அதிகமாக முகம் பார்க்க கூடாது. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.


