News April 28, 2025
கட்டாயத்தின் பேரில் நீக்கம்: தமிழிசை தாக்கு

இருண்ட கால ஆட்சியில் இருந்து 2 அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். TN அமைச்சரவையில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் விலகியுள்ள நிலையில், மக்கள் மன்றம், நீதிமன்றத்தின் கட்டாயத்தால் அவர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள் என தமிழிசை கூறியுள்ளார். இந்த நடவடிக்கை தானாக எடுக்கப்பட்டது அல்ல; தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது என்றும் விமர்சித்துள்ளார்.
Similar News
News April 28, 2025
குரு பெயர்ச்சி: அதிர்ஷ்ட யோகம் பெறும் 5 ராசிகள்

வரும் மே 14-ல் குரு பகவான் மிதுன ராசிக்கு செல்வதால் நன்மைகள் பெறும் ராசிகள்: *மேஷம்: செல்வமும் மகிழ்ச்சியும் பெருகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். *கன்னி: தொழிலில் வெற்றி. வருமானம் உயரும். குடும்ப வாழ்க்கை சிறக்கும். *துலாம்: கல்வி மேம்படும். தொழில், வேலையில் முன்னேற்றம். *கும்பம்: குழந்தை மூலம் மகிழ்ச்சி, காதல் உறவு மேம்படும். வருமானம் உயரும். *மீனம்: தொழிலில் முன்னேற்றம், நிதிநிலை மேம்படும்.
News April 28, 2025
எந்தக் கட்சியில் இணைய போகிறார் காளியம்மாள்?

நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள் புதிய கட்சியில் இணைவது குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ளார். இது குறித்துப் பேசியுள்ள அவர், திமுக, அதிமுக, தவெக எனப் பல கட்சிகளிலிருந்து அழைப்புகள் வந்தது உண்மை தான். ஆனால், எந்தக் கட்சிக்கு செல்வது என்று இதுவரை முடிவெடுக்கவில்லை. மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும் கட்சியில் இணைவேன். அந்த முடிவை மே மாத இறுதிக்குள் நிச்சயம் அறிவிப்பேன் எனக் கூறியுள்ளார்.
News April 28, 2025
IPL-இல் இனி 94 போட்டிகள்

2028 IPL தொடரில் இருந்து 94 லீக் போட்டிகள் நடத்த திட்டமிட்டிருப்பதாக அதன் தலைவர் அருன் துமல் தெரிவித்துள்ளார். 8 IPL அணிகள் மட்டுமே இருந்தபோது, ஒவ்வொரு அணியும் மற்ற 7 அணிகளுடன் 2 லீக் போட்டிகளில் விளையாடின. ஆனால், 10 அணிகள் வந்தபின், இந்த முறை பின்பற்றப்படாமல் 70 போட்டிகள் மட்டுமே நடத்தப்படுகிறது. இது நியாயமான நடைமுறை அல்ல என்று புகார் எழுந்ததால் மறு பரிசீலனை செய்யப்படவுள்ளது.