News April 28, 2025
இரவு நேர ரோந்து விவரம் வெளியீடு

மதுரை மாவட்டம் புறநகர் பகுதிகளில் இரவு நேரம் வந்த பணிகளுக்கு தினமும் அதிகாரிகள் நியமிக்கப்படுவது வழக்கம் அந்த வகையில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் ஏதேனும் பிரச்சினைகள் மற்றும் புகார்கள் இருந்தால் கீழே கொடுக்கப்பட்ட எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என கூறியயுள்ளனர்.
Similar News
News April 28, 2025
மதுரை ரயில்வேயில் உடனடி வேலை

மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி , இராமேஸ்வரம், கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களை மையமாகக் கொண்ட ரயில் நிலையங்களில் ஒப்பந்தம் அடிப்படையில் நிரந்தரமாக பணிபுரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் மாத ஊதியமாக ரூ.18,000 முதல் 36,000 வரை வழங்கப்படும். தொடர்புக்கு: 90427-57341 அழைக்கலாம். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவவும்.
News April 28, 2025
ஜல்லிக்கட்டு செல்ல மனைவி எதிர்ப்பு: வாலிபர் தற்கொலை

மதுரை கூடல்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன் (26). பெயிண்டராக வேலை பார்த்து வந்த இவர், கோமதிபுரத்தை சேர்ந்த அட்சயா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், ஹரிஹரன் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு சென்று வந்தார். ஆனால், அவரது மனைவிக்கு இது பிடிக்கவில்லை. இதனால், கோபித்து கொண்டு அட்சயா, தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் ஹரிஹரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
News April 27, 2025
மதுரை: அதிக வெயிலால் தூய்மை பணியாளர் பலி

மதுரை மாவட்டம் நாகனாகுளம் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்ட மணிவேல் என்ற தூய்மை பணியாளர் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளார். மதுரையில் சுட்டெரிக்கும் அதிக வெயிலின் காரணமாக தூய்மை பணியின் போது மயக்கம் ஏற்பட்டு தலை சுற்றி கீழே விழுந்து உயிரிழந்துள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். *வெயில் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்கவும்.