News April 27, 2025
IPL: RCB அணிக்கு 163 ரன்கள் இலக்கு

புது டெல்லியில் நடைபெற்று வரும் IPL போட்டியில், RCB அணிக்கு DC அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற RCB கேப்டன் பட்டிதார் பவுலிங் செய்ய முடிவு செய்தார். இதனையடுத்து, களமிறங்கிய DC அணி வீரர்கள் நிலைத்து நின்று விளையாடவில்லை. ராகுல் மட்டும் நிதானமாக விளையாடி 41 ரன்கள் எடுத்தார். பின்னர், 20 ஓவர்கள் முடிவில் DC அணி 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது.
Similar News
News August 11, 2025
தலைநகருக்கு டெஸ்லா வந்துருச்சு…

டெஸ்லா தனது 2-வது ஷோரூமை டெல்லி ஏரோசிட்டியில் திறந்துள்ளது. 8,200 சதுரடியில் திறக்கப்பட்ட இதன் மாத வாகை 17 லட்சமாம். கடந்த ஜூலை 15-ம் தேதி மும்பையில் டெஸ்லாவின் முதல் ஷோரூம் திறக்கப்பட்டது. ஒரே மாதத்தில் தனது 2-வது கிளையை திறந்துள்ள டெஸ்லா இந்தியாவின் வாகன சந்தையை கைப்பற்றும் நோக்கில் முழுவீச்சில் இறங்கியுள்ளது. இந்தியாவில் ‘Y’ மாடலில் 2 வெர்ஷன்களை டெஸ்லா அறிமுகப்படுத்தியுள்ளது.
News August 11, 2025
செத்து சாம்பலானாலும் தனித்தே போட்டி: சீமான் உறுதி

அரசியலில் விஜயகாந்த், வைகோ செய்த தவறை நான் செய்ய மாட்டேன் என சீமான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். செத்து சாம்பலானாலும் தனித்தே போட்டியிடுவேன் எனவும் அவர் மீண்டும் உறுதிபட கூறியுள்ளார். விஜய் வந்ததால் தனது வாக்கு சதவீதம் குறைத்துவிடும் என்ற பேச்செல்லாம் கூட்டணிக்கு தன்னை தள்ளும் முயற்சி மட்டுமே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தன் வெற்றியும் தோல்வியும் மக்களுக்கானது என்றும் கூறியுள்ளார்.
News August 11, 2025
3 நாளில் கூலி படம் ரிலீஸ் – ஐகோர்ட் முக்கிய உத்தரவு

ரஜினி, ஆமீர் கான், நாகர்ஜுனா உள்ளிட்ட சூப்பர் ஸ்டார்களின் நடிப்பில் உருவாகியுள்ள ‘கூலி’ படம் இன்னும் 3 நாள்களில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில், சட்டவிரோதமாக படத்தை இணையதளத்தில் வெளியிட தடை கோரி தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதனையடுத்து, இணையதளத்தில் வெளியிட 36 இணையதள சேவை நிறுவனங்கள், 5 கேபிள் டிவி நிறுவனங்களுக்கு ஐகோர்ட் தடை விதித்துள்ளது. தியேட்டரில் ‘கூலி’ பார்க்க யாரெல்லாம் வெயிட்டிங்?