News April 27, 2025

நெல்லையில் கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 4 பேர் பலி 

image

நெல்லை மாவட்டம் நான்குநேரியை அடுத்த தளபதிசமுத்திரம் அருகே நான்கு வழிச்சாலையில் இரண்டு கார்கள் இன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் சம்பவ இடத்தில் குழந்தை உள்பட4 பேர் பலியானதாக கூறப்படுகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு ஏர்வாடி போலீசார் விரைந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

Similar News

News November 5, 2025

நெல்லை: பட்டா வைத்திருப்பவர்களுக்கு நற்செய்தி

image

நெல்லை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 0462-2500592 அணுகலாம். SHARE பண்ணுங்க.

News November 5, 2025

பாளை: 21 நாட்களுக்குப் பின் உடல் ஒப்படைப்பு

image

காசி தர்மத்தைச் சேர்ந்தவர் வினோத் குமார் (30). கூலித் தொழிலாளியான இவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிறைக் கழிவறையில் கடந்த 14 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் உடலை வாங்க மறுத்த நிலையில் பேச்சுவார்த்தையில் 21 தினங்களுக்கு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

News November 5, 2025

நெல்லை: பேருந்து மீது லாரி மோதி விபத்து

image

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே காவல்கிணறு சந்திப்பில் இஸ்ரோ நுழைவு வாயில் அருகே நான்கு வழிச்சாலையில் ஆம்னி பேருந்தின் பின்னால் லாரி மோதியது. இதில் லாரி டிரைவர் காயமடைந்த நிலையில் அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நான்கு வழிச்சாலையில் விபத்து ஏற்பட்டதால் போக்குவரத்து அணுகுசாலையில் மாற்றி விடப்பட்டுள்ள நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!